போரில் சரணடைந்தவர்கள் பலர் சட்டுக்கொலை தேநீரைக் கொடுத்துவிட்டு இராணுவம் கொடூரச் செயல் இறுதிப் பதைபதைப்பை பகிர்ந்தார் சந்திரநேரு


வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினருக்கு இராணுவம் தேநீர் வழங்கி விட்டு பின்னர் அவர்களை சுட்டுக்கொன்றது என திடுக்கிடும் தகவல்கள் பலவற்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் சந்திரநேரு தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், புலிகளின் சமாதான செயலக பணிப்பாளர் புலித்தேவன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான போராளிகள், பொதுமக்கள் இறுதி மோதல்களின் இறுதி நாளான மே 18, 2009 காலையில் வெள்ளைக் கொடிகளைப் பிடித்துக் கொண்டு இராணுவத்திடம் சரணடைந்தனர். ஆனாலும், அவர்களை இராணுவம் தடுப்பில் வைத்திருந்து சுட்டுக் கொன்றது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொலைக்காட்சி அரசியல் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே சந்திரகாந்தன் சந்திரநேரு இறுதி மோதல்களின் பரபரப்பான நிமிடங்கள் பற்றி தன்னுடைய அனுவங்களைப் பகிர்ந்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

இறுதி மோதல்களின் இறுதிக் கட்டத்தில் ஆயுதங்களை மௌனிப்பது தொடர்பில் விடுதலைப் புலிகள் தீர்மானத்துக்கு வந்து, அந்த விடயத்தை சர்வதேசத்துக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும் அறிவிக்கும் பொறுப்பை பா.நடேசனுக்கு ஊடாக என்னிடம் வழங்கியிருந்தனர்.

இதன்படி இறுதிக்கட்டத்தில் எஞ்சியுள்ள விடுதலைப் புலிகளையும், பொதுமக்களையும் உயிர்ச் சேதங்கள் இன்றி சரணடைய வைப்பதற்கான முயற்சிகளில் நான் ஈடுபட்டேன்.

இந்த விடயம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் இளைய சகோதரர் பஷில் ராஜபக்ஷவுடன் நான் தொடர்புகளை மேற்கொண்டு குறித்த விடயம் தொடர்பில் பேசியிருந்தேன்.

அதன் பின்னர் அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ என்னுடன் தொலைபேசியில் உரையாடி சரணடைபவர்களின் உயிருக்கான உத்தரவாதத்தை என்னிடம் வழங்கியிருந்தார்.

இந்த சமரச முயற்சிகளின் பலனாக பசில் ராஜபக்ஷ மற்றும் நடேசன் ஆகியோர் தொலைபேசியில் பேசியுள்ளார். இதனை இருவரும் என்னிடம் உறுதி செய்தனர்.எனினும் 18-ம் திகதி அதிகாலையில் அனைத்து தொடர்புகளும் நின்றுவிட்டன.

அந்த சமயத்தில் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ (தற்போது சிறையில்) தான் சரணடைந்தவர்களிற்கு தேநீர் கொடுத்துவிட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர் என்ற தகவலை என்னிடம் கூறினார் என சந்திரநேரு தெரிவித்தார்.

மேலும் சமரச முயற்சியை நம்பி சரணடைந்த விடுதலைப் புலிகளை இராணுவம் நம்பிக்கைத் துரோகம் செய்து சுட்டுக் கொன்று விட்டதாகவும் இது பாரிய யுத்தமீறல் எனவும் அவர் சாடலுடன் சுட்டிக்காட்டியுள்ளார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila