ஏனைய மாகாணங்களை விட வடக்கு மாகாணத்திற்கு அதிகளவு நிதி வேண்டும் ஜனாதிபதியிடம் முதல்வர் விக்கி கோரிக்கை


வடக்கு மாகாண சபைக்கு ஏனைய மாகாணங்களை விட அதிகளவான நிதியயாதுக்கித் தருமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

புங்குடுதீவு மாணவியின் கொலை, அதற்கு பின்னரான தொடர் ஆர்ப்பாட்டங்கள், யாழ்.நீதிமன்ற கட்டடத் தொகுதி மீதான தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்வதற்கென நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்திற்கு திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் யாழ்.வேம்படியில் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் நடைபெற்ற மாணவர்களுடனான சந்திப்பின் போதே முதலமைச்சர் மேற்கண்ட கோரிக்கையினை விடுத்துள்ளார்.

வடக்கு மாகாணம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாகாணம் என்ற வகையில் ஏனைய மாகாணங்களை விட வடக்கு மாகாண சபைக்கு அதிக நிதியயாதுக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­விடம் கோரிக்கை முன் வைத்திருந்தோம்.

ஆனால் அவர் நாட்டிலுள்ள மாகாணங்களுக்கு ஒதுக்கிய அளவு நிதிகளினையே வடக்கு மாகாண சபைக்கும் ஒதுக்கியிருந்தார்.

எனினும் பாதிக்கப்பட்ட மாகாணம் என்றவகையில் எமக்கு அந்த நிதி போதவில்லை. இதேபோல் 4 மடங்கிற்கு மேல் நிதி தேவைப்படுகின்றது.

குறிப்பாக வடக்கு மாகாணம் போரின்போது பல அழிவுகளினை சந்தித்துள்ளது. 85 ஆயிரம் கணவனை இழந்த பெண்கள், பெற்றோரை இழந்த சிறுவர்கள் என பல தரப்பட்டவர்கள் இன்னமும் யுத்த பாதிப்புக்களிலிருந்து மீண்டெளாத நிலையிலேயே உள்ளனர்.

இவற்றை விட உட்கட்டுமான அபிவிருத்தி என்பது நிதிப்பற்றாக் குறை காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.

இந்நிலையில் யாழ்.வந்த ஜனாதிபதியிடம் மாணவர்கள் முன்வைத்த கோரிக்கைகளுடன் நானும் இந்த கோரிக்கையினை முன்வைத்தேன்.இது தொடர்பில் கொழும்பு சென்று ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்ததாக முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.                                
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila