போதை பொருள் வியாபாரிகளின் புகைப்படம் வெளியிடப்படும் - குளோபல் தமிழ்ச செய்தியாளர்

போதை பொருள் வியாபாரிகளின் புகைப்படம் வெளியிடப்படும் - குளோபல் தமிழ்ச செய்தியாளர்:-

போதை பொருள் வியாபாரிகள் மற்றும் போதை பொருள் விற்பனை முகவர்களின் புகைப்படங்கள்,  பெயர் விபரம் அடங்கலான தகவல்களை தாம் திரட்டி வைத்துள்ளதாகவும் அதனை விரைவில் ஊடகங்களுக்கு கையளிக்க உள்ளதாகவும் சமூக அமைப்பு ஒன்று தகவல் அளித்துள்ளது.

அந்த அமைப்பு மேலும் தெரிவிக்கையில்,

யாழில் தற்போது போதை பொருள் விற்பனை திட்டமிட்ட ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதனை திட்டமிட்டு மேற்கொள்பவர்கள் பாடசாலை மாணவர்களையே பிரதான இலக்காக கொண்டுள்ளனர்.

யாழில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலைகளை இலக்கு வைத்து தமது வியாபரத்தை மேற்கொள்கின்றனர். குறிப்பாக உயர்தர மாணவர்கள் மத்தியிலையே தமது போதை பொருள் வியாபரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

காலையில் பாடசாலை ஆரம்பிக்கும் நேரம், பாடசாலை முடிவடையும் நேரங்களில், பாடசாலைக்கு மோட்டார் சைக்கிள் மற்றும் ஓட்டோக்களில் வரும் போதை பொருள் வியாபாரிகள் மாணவர்கள் மத்தியில் போதை பொருட்களை விற்பனை செய்கின்றனர்.

அவர்களின் வியாபரத்தை தடுத்து நிறுத்த பாடசாலை சமூகம் பயத்தின் காரணமாக பின் நிற்கின்றது அதனை போதை பொருள் வியாபாரிகள் தமக்கு சாதகமாக பயன் படுத்தி கொள்கின்றனர்.

குறித்த போதை பொருள் வியாபாரிகள் தொடர்பில் பொலிசாருக்கு பூரண தகவல்கள் வழங்கபட்டும் பொலிசாரினால் எந்த விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளபப்டவில்லை.

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை பொருள் விற்பனை செய்வோர்களின் பெயர் விபரங்கள் அவர்கள் எந்த நேரம் வந்து செல்கின்றனர், அவர்களின் வாகன இலக்கங்கள் என்பவற்றை பொலிசாருக்கு கையளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அண்மையில் யாழ்.மாவட்ட செயலகத்தால் போதை பொருள் விற்பனை செய்யப்படும் பாடசாலைகள் சிலவற்றை அடையாளம் கண்டு அந்த பாடசாலைகளின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டதுடன் பொலிசாருக்கும் அந்ததகவல் வழங்கப்பட்டது.

வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் பொலிசார் இதுவரை எவரையும் கைது செய்யவில்லை. பாடசாலை ஆரம்பிக்கும் முடியும் நேரங்களில் பொலிசார் மோட்டார் சைக்கிள்களில் ரோந்து சென்றால் கூட போதை பொருள் விற்பனையை இலகுவில் கட்டுப்படுத்த முடியும். ஆனால் அந்த நடவடிக்கையினை கூட பொலிசார் மேற்கொள்ள வில்லை.

தற்போது எமது அமைப்பினால் யாழில் போதை பொருள் முகவர்களாக செயற்படுவோர், போதை பொருள் வியாபாரிகளின் புகைப்படங்களுடன் கூடிய முழு தரவுகளும் சேகரிக்கப்பட்டுள்ளது.

மிக விரைவில் அந்த தகவல்களை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க உள்ளதுடன் பொலிஸ் , மற்றும் ஊடகங்களுக்கும் அவர்களின் புகைப்படத்துடன் அவர்கள் பற்றிய தகவல்களை வழங்க உள்ளோம்.

அதேவேளை யாழில் உள்ள பிரபல வர்த்தகர்களில் இருவர் போதை பொருள் முகவர்களாக செயற்படுகின்றார்கள் என்ற தகவலும் எமது அமைப்புக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. என மேலும் தெரிவித்தனர்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila