புங்குடுதீவில் உயர்தர வகுப்பு பாடசாலை மாணவியயாருவர் கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்தும் குற்றவாளிகளுக்கு அதியுச்ச தண்டனை வழங்கக் கோரியும் பாடசாலை மாணவர்களாலும் இளைஞர்களாலும் வடக்கு முழுவதிலும் தொடர்ச்சியாகப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதனால் வடக்கு எங்கும் போராட்டங்களும் பேரணிகளுமாக மக்களின் உணர்வு எழுச்சிகள் கிளர்ந்தெழுந்துள்ளன.நேற்றைய தினம் இடம்பெற்ற போராட்டங்களால் வடக்கின் செயற்பாடுகள் அனைத்தும் முற்றுமுழுதாக ஸ்தம்பிதமடைந்திருந்தது.
இதில் யாழ்.நகர் நேற்றைய தினம் போராட்டங்களால் நிறைந்து பெரும் யுத்த பூமி போல் காட்சியளித்தது. இளைஞர்களினால் முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டங்களின் போது பொலிஸார் எவரும் எங்கும் தலை கூட காட்டாது அவரவர் பொலிஸ் நிலையங்களிலேயே முடங்கினர்.
புங்குடுதீவில் படுகொலை செய்யப்பட்ட மாணவிக்கு நீதிகோரும் வகையில் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, கிளிநொச்சி உட்பட பல மாவட்டங்களில் உள்ள இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் நேற்று முதல் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்களை முன்னெ டுத்திருந்தனர்.
இதில் யாழில் உள்ள பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் வீதிகளில் இறங்கி வித்தியாவிற்கு நீதி கோரும் வகையில் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.
நேற்று காலை ஒன்பது மணியளவில் யாழ். நகரில் ஒன்று கூடிய இளைஞர்கள் பேரணியொன் றினை முன்னெடுத்து யாழ்.வைத்தியசாலை வீதி மற்றும் கஸ்தூரியார் வீதி, ஸ்ரான்லி வீதி என அனைத்து வீதிகளிலும் இறங்கி பெரும் பேரணியொன்றினை முன்னெடுத்திருந்தனர்.
இதன் பின்னர் யாழ். நகரில் உள்ள கடைகள் அனைத்தையும் மூடுமாறு இளைஞர்கள் உத்தரவிட்டதையடுத்து பெரும்பாலான கடைகள் மூடப்பட்டன.
எனினும் சில கடைகள் திறந்து காணப்பட்டி ருந்தன. இக்கடைகள், நிறுவனங்களுக்குள் புகுந்த ஆர்ப்பாட்டக் காரர்கள் வலுக்கட்டாயமாக கடைகளை பூட்டி எச்சரிக்கையும் செய்தனர். இதனால் நேற்று பத்து மணிக்கு பின்னர் யாழ்.நகரில் உள்ள அனைத்து கடைகளும் பூட்டப்பட்டு யாழ்.நகரே போராட்டங்களால் நிரம்பி வழிந்தது. மதியத்தின் பின்னர் யாழ்.நகர் சன நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.
மத்திய பஸ் நிலையம் முன்பாக முன்னெ டுக்கப்பட்ட இவ்வார்ப்பாட்டம் ஒருகட்டத்தில் பேரணியாக உருவெடுத்து கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரி யாழ்.பொலிஸ் நிலையத்தினை முற்றுகையிட தொடங்கினர்.
இதனால் போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் நிலை உருவாக நிலைமை மேலும் பதற்றமாக கலகமடக்கும் பொலிசார் பொலிஸ் நிலையத்திற்கே பாதுகாப்பு வழங்க வேண்டிய நிலைமையும் ஏற்பட்டிருந்தது.
பின்னர் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவராக கூறப்படுகின்ற வெளிநாட்டு நபரொருவரை தப்பிக்க விட்டதாக கூறப்படுகின்ற சட்டத்தரணி வி.ரி.தமிழ்மாறன் தங்கியிருந்ததாக கருதப்படுகின்ற யாழில் உள்ள விருந்தினர் விடுதியொன்றும் ஆர்ப்பாட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டிருந்தது.
பின்னர் அவர் அங்கு இல்லை என தெரிந்ததும் ஆர்ப்பாட்டகாரர்கள் அங்கிருந்து விலகி சென்றுள்ளனர். பின்னர் யாழ்.நீதிமன்ற கட்டடத்தொகுதி முன்பாக திரண்ட போராட்டக்காரர்கள் வித்தியாவின் படுகொலைக்கு நீதி வழங்குமாறும் கோசமிட்டனர்.
பின்னர் யாழ்.நகரில் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பிற்கு வர வழைக்கப்பட்டதனை அடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் ஓரளவு அவ்விடங்களை விட்டு வெளியேற தொடங்க யாழ்.நகரில் தொடர்ந்த ஆர்ப்பாட்டம் படிப்படியாக முடிவுக்கு நண்பகல் வேளை கொண்டு வரப்பட்டு ஆர்ப்பாட்டகாரர்களின் முற்றுகையிலிருந்த யாழ்.நகர் மாலை வேளை விடுதலை பெற்றது.
இதேவேளை யாழ்.இந்து கல்லூரி, கொக்குவில் இந்துக் கல்லூரி, யாழ்.மத்திய கல்லூரி, யாழ்.திருக்குடும்ப கன்னியர்மடம், யாழ்.இந்து மகளிர் கல்லூரி, உடுவில் மகளிர் கல்லூரி மற்றும் சென்.ஜேம்ஸ் உள்ளிட்ட யாழ்ப்பாணம் மற்றும் அதனையண்டிய இடங்களில் உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களும் தத் தமது பாடசாலை முன்பாக ஒரு மணிநேர கண்டன போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
உரியவர்கள் இருந்தால் இவ்வாறு நடக்குமா?, நீதியே தாமதிக்காமல் நீதியை வழங்கு!, எங்கள் பிரதேசம் உங்களுக்கு சுடுகாடா? வித்தியாவிற்கு நீதி கோருவோம் வாருங்கள், பெண்ணினமே எழுந்திரு நீதிகோருவோம், வடக்கில் குற்றம் செய்தால் தண்டனை இல்லையாயா? மாணவர்களுக்கு பாதுகாப்பு வழங்குங்கள், குற்றம் இழைத்தவர்களுக்கு அதிகபட்ச தண்டனையான தூக்கு தண்டனையை வழங்குங்கள் நாங்கள் என்ன ஆபாசப் பொருட்களா?
எமக்கான நீதிக்கு இனியும் தாமதம் வேண்டாம்,ஒருத்திக்கு இழைத்த மோசம் நாட்டிற்கு இழைத்த நாசம்,பள்ளி மாணவர்களை இரையாக்காதே?,வித்தியா முற்றுப்புள்ளியா இல்லை தொடர் கதையா? எழுந்திரு மாணவ சமுதாயமே, மரண தண்டனையா அதுக்கும் மேல் மக்களிடம் விட்டு விடு, சட்டமே உன் சட்டப்பைகளுக்குள் நீதியை மறைத்து விட் டாயா?, சட்டவாளிகளே மீண்டும் வித்தியாவை கொன்று விடாதீர்கள், இதுவரை பொறுமையாக இருந்தது போதும் பொங்கிஎழு பெண்ணினமே, நீதியின் கண்கள் குருடா?, குற்றவாளிகளுக்கு பிணை வழங்காதே, என்று எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும் பெண்கள் மீது மேற்கொள்ளப்படும் துஷ்பிரயோகம் மற்றும் படுகொலைகளுக்கு எதிராக புதிய சட்டம் ஒன்றை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும் எனக்கோரி யாழ்.நல்லூர் கந்தசுவாமி ஆலயம் முன்பாக நேற்றைய தினம் கண்டன ஆர்ப்பாட்டப் பேரணி யொன்றினையும் மக்கள் சக்தி அமைப்பினர் முன் எடுத்திருந்ததோடு பேரணியாக சென்று யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இவ் ஆர்ப்பாட்டத்தின் போது கற்பழிப்புக்கள் தொடர்பில் புதிய சட்டத்தை உருவாக்குவதற்கு வடமாகாண சபை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துக்கு அழுத்தங்கள் கொடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறினர்.
ஆர்ப்பாட்டகாரர்கள் யாழ்.மாவட்டச் செயலகத்துக்குச் சென்று அங்கு யாழ்.மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாய கனிடம் மகஜர் ஒன்றைக் கையளித்தனர்.கடந்த 13ஆம் திகதி பாடசாலைக்குச் சென்ற மாணவி கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலையுடன் தொடர்புடைய 8 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு, மூவர் விளக்க மறியலிலும் ஐவர் பொலிஸ் காவலிலும் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மாணவியின் கொடூரகொலைக்கு நீதி வேண்டுமெனவும் இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க சம்பந்தப்பட்டவர்கள் தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கோரியும் வடக்கு முழுவதும் பேரணிகள் கடையடைப்புக்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் என்பன நேற்று , இன்று, நாளை என தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.