உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்பட்டதை எதிர்த்து கறுப்புக்கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன!

உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சில பகுதிகளில் இன்று கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.
இது தொடர்பாக தெரியவருதாவது,
உத்தியோகபூர்வ பதவிக்காலம் நிறைவுபெற்ற 234 உள்ளூராட்சி மன்றங்கள் நேற்று நள்ளிரவுடன் கலைக்கப்பட்டன.
அது மாத்திரமல்லாது, மாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபைகளின் நிர்வாக அதிகாரங்கள் நகர ஆணையாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களின் கீழ் கொண்டுவரப்பட்டன.
பதவிக்காலம் நிறைவுபெற்ற உள்ளுராட்சி மன்றங்களுக்காக உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி பல இடங்களில் கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலினை அரசாங்கம் விரைவில் நடத்த வேண்டுமென ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொது செயலாளர் சுசில் பிரேம ஜயந்த வலியுறுத்தியுள்ளார்.
ஆனாலும் 335 உள்ளூராட்சி மன்றங்களினதும் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila