இசைப் பிரியாவின் வாழ்க்கை வரலாற்றை "போர்க்களத்தில் ஒரு பூ" என்ற தலைப்பில் தமிழ் நாட்டில் படமாக்கி இருக்கிறார் கணேசன். கடந்த 12ம் திகதி ,அவர் குறித்த படத்தை தணிக்கை குழுவுக்கு காண்பித்து சர்டிபிக்கேட் எடுக்க முனைந்துள்ளார். மதியம் 11 மணி முதல் 1.40 மணிவரை படத்தை பார்த்த அதிகாரி, ஜெயந்தி முரளிதரன் கணேசனை அழைத்து தயாரிப்பாளர் யார் என்று பதற்றமாக கேட்டுள்ளார். அவர் வரவில்லை படத்தை இயக்கியது நான் தான். என்னிடம் நீங்கள் தாராளமாகப் பேசலாம் என்று கணேசன் கூறியுள்ளார். என்னையா படம் எடுத்திருக்கிறீர்கள் ? இசைப் பிரியாவை இலங்கை ராணுவம் தான் கொன்றது என்று காட்டி இருக்கிறீர்கள். அதற்கு ஆதாரம் உண்டா என்று படு கோபமாக அவர் கேட்டுள்ளார். பல செய்திகள் இது தொடர்பாக வெளியாகி உள்ளது என்று கணேசன் எவ்வளவோ எடுத்துக் கூறியுள்ளார்.
ஆனால் எதனையும் செவி மடுக்காத தணிக்கை அதிகாரி , ஜெயந்தி முரளிதரன் இலங்கை எமது நட்ப்பு நாடு. அந்த நாட்டு ராணுவ வீரரை தாக்கி படம் எடுத்து அதனை வெளியிட நான் அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளார். இலங்கை எமது நட்ப்பு நாடு இல்லை , என்று செல்வி ஜெயலலிதா தமிழக சட்ட மன்றில் தீர்மானம் கொண்டுவந்ததை அவர் ஜெயந்திக்கு ஞாபகப்படுத்தியுள்ளார். அதனையும் ஏற்க்க அவர் மறுத்து படத்திற்கு தடை விதித்துள்ளார். அந்த அளவு சிங்கள பாசம் அவருக்கு இருக்கிறது.
வேண்டும் என்றால் ‘ரிவைசிங் கமிட்டி’க்கு நீங்கள் பரிந்துரை செய்துகொள்ளுங்கள். அவர்கள் தீர்மானிக்கட்டும். பிறகு வேண்டுமானால் உங்கள் விருப்பப்படி, மும்பையோ அல்லது டெல்லி எப்.சி.ஏ.டி ரைபூனலுக்கு போகிறேன்’, என்று கணேசன் கூறியுள்ளார். ஆனால் அவர் அதற்கும் மறுத்துவிட்டார். இசைப்பிரியா இறந்த நாளன்று இந்த படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தோம். அது முடியாமல் போய்விட்டது என்பதை வருத்தத்தோடு தெரிவித்து கொள்கிறேன் என்று கணேசன் தெரிவித்துள்ளார். மேலும் இந்தப் படத்தை தடைசெய்ததற்கு எதிர்த்து மேல் முறையீடு செய்ய கணேசன் உள்ளதாக அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.