இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்களான முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோர் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. சட்ட மா அதிபர் திணைக்களத்தின் மெத்தனப் போக்கே இவ்வாறு பிரதான சந்தேக நபர்களை கைது செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டதற்காக காரணம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ரவிராஜ் கொலை தொடர்பிலான விசாரணைகள் பூர்த்தியாகி அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கான ஆலோசனைகளை சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் காவல்துறையினர் கோரியுள்ளனர். இவ்வாறு கோரிக்கை விடுத்து சில காலமாவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ரவி ராஜ் கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் ஐந்து கடற்படை உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த படுகொலையை மேற்கொள்ளுமாறு பணிப்புரையை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் வழங்கியதாகவும், நேரடியாக இந்த கொலையை வழிநடத்தியவர் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட எனவும் சாட்சியங்களுடன் நிரூபணமாகியுள்ளது. இதன் அடிப்படையிலேயே குறித்த இருவரையும் கைது செய்ய அனுமதியளிக்குமாறு சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸிற்கு நெருக்கமானவர்கள் தொடர்ந்தும் சட்ட மா அதிபர் திணைக்களத்தில் கடமையாற்றி வருவதாகவும் அவர்களின் நடவடிக்கைகளினால் இவ்வாறு கோதபாயவையும், கரன்னாகொடவையும் கைது செய்ய முடியவில்லை. இதேவேளை, கொலை தொடர்பில் ஸ்கொட்லன்ட்யார்ட் காவல்துறையினர் விசாரணை நடத்தியதாகவும் அது குறித்த அறிக்கை இன்னமும் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் சட்ட மா அதிபர் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அறிக்கை கிடைக்கும் வரையில் இந்த சம்பவம் குறித்த ஆலோசனைகளை வழங்க முடியாது என தெரிவித்துள்ளனர். |
ரவிராஜ் படுகொலையுடன் கோத்தபாய, கரன்னகொடவுக்குத் தொடர்பு!
Add Comments