நேற்று புதன்கிழமை இரண்டாவது தடவையாக கோறளைப்பற்று பிரதேச செயலக அலுவலகத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய மீறாவோடை மக்கள் கவணயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோறளைப்பற்று பிரதேச செயலகத்தினால் 62 தமிழ் குடும்பங்களுக்கு குடியிருப்புக் காணிக்குறிய காணி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட போதிலும் அதில் தங்களை குடியேறி இருப்பதற்கு அயல் கிராமமான மீறாவோடை மற்றும் ஓட்டமாவடி பிரதேசத்தைச் சேர்ந்த சில முஸ்லீம் மக்கள் தடையாக இருந்து வருவதாகவும் அதனால் தங்களது காணிகளை தங்களுக்கு மீட்டுத்தருமாரும் கோரியே இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மீறாவோடை தமிழ் பிரதேசத்தில் இருந்து பாதிக்கப்பட்ட 62 குடும்பங்களும் வாழைச்சேனை மட்டக்களப்பு பிரதான பாதைவழியாக ஊர்வலமாக சென்று பிரதேச செயலகத்திற்கு முன்பாக பிரதேச செயலக முன் வாசல் கதவினை மூடி எவரும் உட் செல்ல விடாது தடுத்து தங்களது எதிர்ப்பினைத் தெரிவித்தனர். நடவடிக்கையினால் பிரதேச செயலக நேற்றைய நடவடிக்கைகள் யாவும் சுமார் 3 மணி நேரம் இஸ்தம்பித நிலையினை அடைந்தது.குறித்த காணிப்பிரச்சினை தொடர்பாக நேற்று மீண்டும் மாவட்டச் செயலாளருக்கு உதவி பிரதேச செயலாளர் தெரியப்படுத்தியிருந்தார்.