முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரம் நினைவு நாள் இன்று பருத்தித்துறை முனை பகுதியில் வடமாகாண சபை உறுப்பினர் சுகிர்தன் தலைமையில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. அவருடன் வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் சஜீவன், சதீஸ் மற்றும் பலரும் கலந்து கொண்டனர். அமைதியாக நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வினை அவதானித்த வீதியால் பயணித்த பொதுமக்கள் பலரும் தாமும் இணைந்து அஞ்சலி செலுத்தினர்.
இதனிடையே முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின் யாழ்.மாவட்டத்திற்கான நிகழ்வு நாளை 15ம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்.முற்றவெளியில் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டுக்குழு தலைவரும் வடமாகாணசபை உறுப்பினருமான கே.சிவாஜிலிங்கம் அறிவித்துள்ளார்.
அன்று காலை தமிழாராய்ச்சி மாநாட்டினில் உயிரிழந்தவர்கள் நினைவு தூபி முன்னதாக அனைவரையும் ஒன்று கூடுமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.தந்தை செல்வா சதுக்கப்பகுதியினில் அஞ்சலி நிகழ்வு நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.