யாழ். சாவகச்சேரி கெருடாவில் பிரதேசத்தில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டுவந்த பெண் ஒருவரை எதிர்வரும் 2ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சாவகச்சேரி - கெருடாவில் பிரதேசத்தில் பாரிய கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டுவரும் நபரொருவரைக் கைதுசெய்யச் சென்ற சாவகச்சேரிப் பொலிஸார், விற்பனையில் ஈடுபட்டிருந்த பெண்ணையும் அவரது மகளையும் நேற்றைய தினம் கைது செய்திருந்தனர்.
அவர்கள் இருவரையும் பொலிஸார் இன்று (22) நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தியபோது, குறித்த பெண்ணை எதிர்வரும் 2ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும், 17 வயதான மகளை சிறுவர் இல்லத்தில் சேர்க்குமாறும் சாவகச்சேரி நீதிமன்ற நீதிவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் உத்தரவிட்டுள்ளார்.
´தந்தை தங்களை கட்டாயப்படுத்தி கசிப்பு விற்பனையில் ஈடுபடுத்துகிறார்´ எனக் குறித்த 17 வயதான மகள் நீதிமன்றில் தெரிவித்ததையடுத்து, தந்தையைக் கைது செய்து மன்றில் ஆஜர்ப்படுத்துமாறு பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.