தேர்தல் முறைமையை மாற்றியமைப்பதற்கான 20ஆவது திருத்தச் சட்டவரைவின் பின்னணியில் இனவாத நிகழ்ச்சி நிரல் இருக்கிறது.
அது மீண்டும் ஒரு போராட்டத்துக்கு வித்திடும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் ஜே.வி.பி.நேற்று எச்சரித்தது.
ஜே.வி.பியின் செய்தியாளர் மாநாடு நேற்று முற்பகல் பத்தரமுல்லையிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றது.
கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா அங்கு கருத்துத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது நடைமுறையிலுள்ள தேர்தல் சட்டத்தில் குறைபாடுகள் காணப்படுகின்றன.
எனவே அவற்றைத் திருத்தி அமைத்து ஜனநாயகத்தை பலப்படுத்தும் நோக்கில் புதியதொரு தேர்தல் சட்டம் அவசியம்.இதை நாமும் ஏற்றுக் கொள்கின்றோம்.எனினும்,தற்போது வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரமாகியுள்ள 20ஆவது திருத்தச் சட்ட வரைவானது பல கட்சி ஜனநாயகத்தை அழித்து பிரதான இரு அரசியல் கட்சிகளுக்கு வழிகாட்டும் வகையிலேயே அமைந்துள்ளது.