சம்பந்தனின் ‘2016 இல் தீர்வு’ அரசியல் மறந்து கதைக்கும் ஒருவரின் கூற்று எனவும் 2016க்குள் எலும்புத் துண்டைத்தானும் சிங்களத்திடமிருந்து பெற்றுவிட முடியாது என தமிழரசுக்கட்சியின் நிறுவன உறுப்பினர் நாதன் ஐயா தெரிவித்துள்ளார்.
கஜேந்திரகுமார் அவர்களே தந்தை செல்வாவின் எண்ணங்களைச் மனதில் வைத்து செயற்படுவதாகவும், சம்பந்தன் தந்தையின் கொள்கைகளை மறந்து செயற்படுவதாகவும் கூறினார்.
தமிழ்லீடருக்கு வழங்கிய நேர்காணலில் மாவை, சுமந்திரன் மற்றும் முதல்வர் விக்கினேஸ்வரன் தொடர்பாகவும் தனது எண்ணங்களை வெளிப்படுத்திய நாதன் ஐயா தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடுகிறார்.
வவுனியா நகர சபைத் தலைவராக இருந்த நாதன் ஐயா அதிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னணியையும் விவரிக்கிறார்: