முருங்கன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் சட்ட விரோதமான முறையில் மணல் கொண்டு செல்லப்பட்ட 5 டிப்பர்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளதோடு அதன் சாரதிகள் ஐவரையும் கைது செய்துள்ளதாக முருங்கன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்தன அலகக்கோனின் பணிப்புரைக்கு அமைவாக முருங்கன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.ஐ.அபேயரத்தின தலைமையிலான பொலிஸ் குழுவினர் மணல் கொண்டு செல்லப்பட்ட டிப்பர்களை கைப்பற்றியுள்ளனர்.
அரிப்பு மற்றும் சிலாபத்துறை பகுதிகளுக்கு குறித்த மணல் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அவற்றில் ஒரு டிப்பர் நானாட்டான் பகுதியில் வைத்து கைப்பற்றியுள்ளதோடு ஏனைய 4 டிப்பர்களும் முருங்கன் பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளன.
மணலுடன் 5 டிப்பர்களும் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதோடு சாரதிகள் ஐவரும் கைது செய்யப்பட்டு முருங்கன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த ஐவரிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டவுடன் அவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் முருங்கன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.