யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவ்வமைப்பின் தலைவர் எஸ். சஜீவன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
”துர்க்கையம்மன் கோவிலில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ரணில் தெரிவித்திருந்தார் தான் ஆட்சிக்கு வந்தால் மீள்குடியேற்றம் செய்யப் போவதாக. ஆனால் இன்று ஆட்சிக்கு வந்து 100 நாள் வேலைத்திட்டம் கழிந்து 2 மாதங்கள் ஆகியுள்ள சூழலில் வெறும் 570 ஏக்கர் நிலப்பரப்பை விடுவித்துவிட்டு, அதிலும் ஏறத்தாழ 50 ஏக்கர் நிலத்தில் பாரிய இராணுவத்தளங்கள் உண்டு, இப்படியானவைகளை செய்து மீள்குடியேற்றம் செய்தாயிற்று என்ற தோரணையைக் காட்டுவதற்கான வேலைகளைத்தான் செய்கிறார்கள்.
இதேவேளை, 25 வருடங்களாக அகதி முகாம்களில் உள்ள மக்கள் அடிப்படை வசதிகள் எதுவுமற்ற நிலையில் வசித்து வருவதாகவும் வலி வடக்கு மீள்குடியேற்றக் குழு தலைவர் எஸ். சஜீவன் தெரிவித்தார்.