ஆட்சியில் இருக்கும் போது ஆட்டம் போடக் கூடாது - க.வி.விக்னேஸ்வரன்


news
ஆட்சியில் இருக்கும் போது மக்களை மறந்து, நாட்டின் சுபீட்சத்தை மறந்து, பதவி இறுமாப்பில் மற்றவர்கள் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டு, பணத்தைத் தேடுவதில் மட்டும் குறிக்கோளாக இருந்தால், எமக்கு என்ன நடக்கும் என்பதற்கு, கடந்த அரசின் ஆட்சிக் இழப்பு சிறந்த எடுத்துக் காட்டாகும்.
 
இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வவுனியா செட்டிகுளம் மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட தொழில் நுட்ப ஆய்வுகூடத் திறப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு முதலமைச்சர் உரையாற்றினார். 
 
அவர் தனது உரையில் தெரிவித்ததாவது:
 
ஆட்சியில்
கடந்த அரசு ஆட்சியில் இருந்த போது மஹிந்தோதய தொழில் நுட்ப ஆய்வுகூடம், மஹிந் தோதய தொழில்நுட்பபீடம் எனப் பெயர் சூட்டி அவற்றின் அடிக்கல் நாட்டு விழாக்களுக்கு நான் பல பாடசாலைகளுக்குச் சென்றிருந்தேன். 
 
கட்டி முடிக்கப்பட்டவை மஹிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுக் கூடமாகவோ அல்லது மஹிந்தோதய தொழில்நுட்பப்பீட மாகவோதான் திறக்கப்பட்டன.
 
ஆட்சி மாற்றத்தின் காரணமாகவோ பிற காரணங்களாலோ மஹிந்தோதய என்ற அடை மொழி தற்போது மறைந்து தொழில்நுட்ப ஆய்வுகூடம் மற்றும் தொழில் நுட்பப்பீடம் என்று இன்றைய திறப்பு விழாக்கள் மாற்றமடைந்து விட்டன. எத்தனை மாற்றங்கள்! 
 
இதை நான் இங்கு குறிப்பிடுவதன் நோக்கம், நாம் ஆட்சியில் இருக்கும்போது மக்களை மறந்து, நாட்டின் சுபீட்சத்தை மறந்து, எமது பதவி இறுமாப்பில் மற்றவர்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டு, பணத்தைத் தேடுவதில் மட்டும் குறிக்கோளாக இருப்போமாயின் எமக்கு ஏற்படக்கூடிய நிலமை என்ன என்பதை இந்தச் சிறு சம்பவம் எடுத்துக்காட்டுகின்றது- என்றார் முதலமைச்சர்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila