பாராளுமன்றத்தில் நேற்று அமர்வின்போது இடம்பெற்ற அரசாங்கத்தின் 100 நாள் வேலைத் திட்டத்தின் மீதான சபை ஒத்திவைப்பு வேளையில் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. அங்கு மேலும் கூறுகையில், கொடுங்கோல் ஆட்சியாளர்களையும் வெள்ளை வேன் கலாசாரத்தை மேற்கொண்டவர்களையும் சிறைச்சாலைகளில் சிறைக்கைதிகளை படுகொலை செய்த மற்றும் காணாமல்போதல் ஆகியவற்றுக்கு காரணமானவர்களையும் வடக்கு, கிழக்கில் எமது மக்களை மிருகங்களை விட மிகமோசமாக நடத்தியவர்களையும் இல்லாது செய்து புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளித்ததில் என்ன தவறு இருக்கிறது? எனக் கேட்க விரும்புகின்றேன். புதிய அரசாங்கத்தை நாம் அமைத்த போதிலும் எமது மக்களின் கனவுகள் தவிடுபொடியாகிவிட்டன என்பதையும் கூறவேண்டும். நாம் மஹிந்த அரசாங்கத்தையும் வெளிப்படையாக விமர்சித்திருந்தோம். புதிய ஆட்சி மலர்ந்திருக்கின்ற போதிலும் எமது மக்களுக்கு எந்த நன்மையும் கிட்டிவிடவில்லை. அதேபோன்று புதிய அரசாங்கத்தின் வெற்றிக்கு காரணமானவர்கள் என்ற வகையில் எமக்கு இழைக்கப்படுகின்ற அநீதிகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாய்மூடியதாகவும் வல்லமையற்றும் இருந்துவிடப் போவதில்லை. இன்று இன்றைய ஆட்சி குறித்து பேசுகின்றவர்கள் அனுராதபுரச் சிறைச்சாலையில் ஒருவர் கொல்லப்பட்டார். அந்தத் தருணத்திலும் போரின்போது இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் காணாமல்போன போதும் இவர்கள் எதுவும் பேசவில்லை. ஆனால் நாம் அன்றும் எமது மக்களுக்காக குரல் கொடுத்தோம் இன்றும் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். காணாமல்போனோர் தொடர்பில் எமது உறவுகள் ஒருவேளை உணவைக்கூட நிம்மதியாக உண்பதற்கு முடியாதவர்களாக உள்ளனர். இன்றும் சிறைச்சாலைகளுக்குச் சென்று தமது உறவுகளைத் தேடி வருகின்றனர். இவ்வாறு தேடப்படுபவர்கள் இருக்கின்றனரா இல்லையா என்பது குறித்து அரசாங்கம் கூறவேண்டும். காணாமல்போனவர்கள் தொடர்பில் முன்னைய அரசாங்கத்திலும் நியாயம் கிடைக்கவில்லை. புதிய அரசாங்கத்திலும் கனவு தவிடுபொடியாகிவிட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது வடக்கு, கிழக்கு தமிழ் மக்களை சூடேற்றி அவர்களின் இரத்தத்தை கொதிப்படைய செய்வதாக இங்கு உறுப்பினர் ஒருவர் கூறுகின்றார். நாம் கூறுகின்ற கதைகளால் எமது மக்கள் சூடேறுவதற்கும் இரத்தம் கொதிப்படைவதற்கும் அவர்கள் முட்டாள்கள் அல்ல. அத்துடன் சிந்திக்கத் தெரியாதவர்களும் அல்லர். ஏமாளிகளும் இல்லை என்றார். |
புதிய ஆட்சியில் மக்களின் கனவு தவிடு பொடியாகி விட்டது! - நாடாளுமன்றத்தில் செல்வம் எம்.பி
Related Post:
Add Comments