தமிழர்களுக்கு நீதி தேடி அலையும் நீதி அரசர் விக்கினேஸ்வரன் தமிழர்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாரமா? - ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு

அமெரிக்காவில் முன்னைய ஜனாதிபதிகளான நிச்சன்  மற்றும் றேகன்  ஆகியோர் உச்ச நீதிமன்ற நீதியரசர்களை தெரிவு செய்யும் போது அவர்கள் தமது கொள்கைகளேயே கடைப்பிடிப்பார்கள் என்று நினைத்தார்கள். ஆனால் சில நீதியரசர்கள்  டேவிட் சூட்டர், அந்தோணி கென்னடி மக்களின் பக்கம் நின்று மக்களுக்கு உகந்த நீதியை வழங்கினார்கள். அதே போன்றுதான் வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் விக்கினேஸ்வரன் அவர்களையும் கூட்டமைப்பின் தலைவர்களான சம்பந்தன் மற்றும் சுமந்திரன் அவர்களும் முதலமச்சர் வேட்பாளராக தெரிவு செய்த போது தமக்கு ஏற்றால் போல் முதலமைச்சர் நடக்கவேண்டும் என எண்ணி இருந்தனர்.

ஆனால் முதலமைச்சர் நீதியரசர் விக்கினேஸ்வரனோ அமெரிக்கா நீதியரசர்கள் போன்று மக்களின் பக்கம் நின்று அவர்களுக்கு உகந்த படி தனது தீர்மானங்களை செயற்படுத்தி வருகின்றார்.

கூட்டமைப்பின் தலைவர்கள் விக்கினேஸ்வரன் அவர்களை முதலமைச்சர் வேட்பாளராக கொண்டுவந்ததன் நோக்கமே அவர் மூலம் 13ம் திருத்தச்சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்தி தமிழரின் எல்லா பிரச்சனைகளும் முடிந்தது என்று கூறவே நினைத்தார்கள். இதுவே திரை மறைவுத் திட்டமாகும்.

விக்கினேஸ்வரன் அவர்கள் கொழும்பை வசிப்பிடமாகக் கொண்டிருந்தாலும் வடமாகாண முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் வடபுல மக்களோடு வாழ்ந்து அவர்கள் படும் இன்னல்களையும், அடக்கு முறைகளையும் நேரடியாக கண்டு அறிந்து கொண்டார். இது அவரது சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்தியது எனலாம். வரலாற்று ரீதியாக தமிழ் மக்கள் வஞ்சிக்கபட்டு வருவதும், ஒரு இனம் தொடர்ந்தும் தமது உரிமைகக்காக போராடி பல தியாகங்களை செய்திருப்பதும் நேரடியாக அறிந்து கொண்டமையால், தான் இதுவரை ஒரு மாயையில் வாழ்திருந்தாக எண்ணி இருக்கலாம்.

இதனாலேயே அவர் இலங்கையில் தமிழர்களுக்கு நடந்தது இன அழிப்பு என்று தீர்மானத்தினையும் கொண்டு வந்ததோடு, இந்தியப் பிரதமரிடம் நேரடியாகவே தமிழர் பிரச்சனைக்கு 13 திருத்தச்சட்டம் ஒரு நிரந்தரத்தீர்வாகாது, ஒரு நாடு இரு தேசமே சரியான தீர்வாக அமையும் என்று கூறியிருந்தார். அத்துடன் ஐ.நா சட்ட விதிகளுக்கு அமைவாக வடகிழக்கில் இருந்து இராணுவம் திரும்பப் பெறப்படவேண்டும் என்றும் கூறி இருந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் திரு விக்கினேஸ்வரன் அவர்கள், கூட்டமைப்பின் தலைவர்கள் சிங்கள தலைமையிடம் நேரடியா பணத்தினை பெறுகின்றார்கள் என்று குற்றச்சாட்டி இருந்து போது ஒரு எம்  பி உறுப்பினர் மட்டும், சரியான முறையில் திட்டங்களை கொடுத்தே அதற்கான பணம் பெற்றுக்கொண்டதாக அறிக்கை விட்டார்.

ஆனால் வேறு ஒரு உறுப்பினரோ அரசிடம் இருந்து சொகுசு வாகனம் ஒன்றினை (பஜரோ) பெற்று விட்டு அதனை ஒழித்து தற்காலிகமாக ஒரு உறுப்பினரிடம் கொடுக்க முயன்றுள்ளார். அதை அவ் உறுப்பினர் வாங்க மறுக்கவே தற்போது வேறொரு உறுப்பினரிடம் விட்டுள்ளார். வர இருக்கும் தோர்தலின் போது அந்த சொகுசு வாகனத்தினை (பஜரோ) தனது தேவைகளுக்கு பாவிக்கும் எண்ணத்தில் இருக்கின்றார்.

அந்த சொகுசு வாகனத்தினை அரசிடம் இருந்து நன்கொடையாக பெற்ற உறுப்பினர் தற்போது அரசுக்கு அதரவாகவே தனது கருத்துக்களை தெரிவித்து வருவதோடு, சர்வதேச விசாரணையை தவிர்த்து உள்ளக விசாரணை போதுமென்ற கருத்தினையும், ஒற்யையாட்சிக்குள்ளான தீர்வினை  உள்நாட்டுக்குள்ளேயே பேசி தீர்வினை பெறலாம் என்றும்  பேசி வருகின்றார். கடந்த 60 வருடங்களில் நாம் பெற்ற அனுபவங்களை கருத்தில் கொள்ளாமல் மீண்டும் அதனையே புதிதாக பேசி மக்களை ஏமாற்றி வருகின்றார்.

அரசிடம் இருந்து சொகுசு வாகனங்களை பெற்றுக் கொண்டு தனது சுபபோகங்களுக்காக தமிழ்மக்களின் உணர்வுகளையும், மாண்டு போன மக்களின் தியாகங்களையும் சிங்களத் தலைவர்களிடம் விலை பேசிவிட்டார். 60 வருட எமது போராட்டத்தின் தியாகங்களையும், எமக்கு ஒரு நீதியான தீர்வு சர்வதேசத்தினால் கிடைக்கும் என்று நம்பி இருந்த மக்களின் நம்பிக்கைக்கும்  எதிராக செயற்படுகின்றார். அவர் நிச்சயம் அரசிடம் இருந்து பெற்ற சொகுசு வாகனத்தினை மீள ஒப்படைத்துவிட்டு அரசியலில் இருந்து ஒதுங்கி கொள்ள வேண்டும்.

சிங்கள தலைமைகளிடம் லஞ்சங்களையும், சலுகைகளையும் பெற்று எமது மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு முரணாகவும், தமிழ் மக்களையும் பிழையாக வழி நடத்தி செல்லும் தமிழ் தலைமைகளின் செயற்பாட்டினை தைரியமாக உண்மையாக வெளிக்கொண்டுவரும் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்களின் நீதியானதும் நியாயமானதுமான தொடர் நடவடிக்கையானது, யார் சரியான மக்களின் உரிமைக்கு குரல் கொடுக்கின்றார்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டும் ஒரு சரியான நடமவடிக்கையாகும். இதுவே திரு விக்கினேஸ்வரன் அவர்கள் தேவையான நேரத்தில் எமக்கு கிடைத்த ஒரு பெரிய வரப்பிரசாரமோ என எண்ணத்தோன்றுகின்றது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila