தடையுத்தரவை மீறி கொக்கிளாயில் தமிழர்கள் காணியில் விகாரை அமைக்கும் பணி தொடர்கிறது

தடையுத்தரவை மீறி கொக்கிளாயில் விகாரை அமைக்கும் பணி தொடர்ந்து இடம்பெற்று வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன...பொது மக்களின் தகவலை அடுத்து அங்கு சென்ற வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் இன்று மாலை இதை நேரில் உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த வாரம் , காணிப் பிணக்குகளை தீர்க்கும் பொருட்டு முல்லைத்தீவில் இடம்பெற்ற காணி அமைச்சின் உயர் அதிகாரிகளின் நடமாடும் சேவையில் மேற்படி விகாரை அமைப்பதற்கான தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில்,  தொடர்ந்தும் தமிழ்மக்களுக்கான காணியில் இவ்வாறு அத்துமீறுவது
அப்பட்டமான சட்டவிரோத செயல் என்றும் கண்டித்துள்ளார்.
முன்னதாக இன்று மாலை கரைத்துறைப்பற்று பிரதேச செயலரிடம் தான் தொடர்பு கொண்டு கேட்ட போது, குறித்த பிக்குவிடம் தடையுத்தரவு நேரில் வழங்கப்பட்டதாக (எழுத்து பூர்வ தடையுத்தரவு)  தெரிவித்தார்.

இதே வேளை, அங்கு விகாரை அமைக்கும்பணி இடம்பெறுவதை நேரில் உறுதிப்படுத்த ரவிகரன் அவர்கள் இன்று மாலை சென்றபோது அங்கிருந்த படையினர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்துள்ளனர்.
இது பற்றி ரவிகரன் தெரிவிக்கையில்,

முதலில் பிக்கு இருக்கிறார் என்று தெரிவித்து விட்டு,பின்னர் அவர் கொழும்பு சென்று விட்டதாக கூறினர்.. அதே போன்று இன்று தாம் எந்த வேலையும் செய்யவில்லை என்று படையினர் கூறியபோதும், சற்றுமுன்னர் அங்கு கட்டுமானப்பணிக்கான கலவை பூசப்பட்டிருப்பது நேரில் அவதானிக்கக்கூடியதாக இருந்தது .அதை நான் சுட்டிக்காட்டியபோது சிறியளவிலான வேலைகள் இடம்பெற்றது உண்மை தான் என்று படையினர் தெரிவித்துள்ளனர். மேலும் தடையுத்தரவு பற்றி பிக்கு தமக்கு எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் படையினர் என்னிடம் கூறினர்.
தடையுத்தரவு அதிகாரபூர்வமாக பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு அத்துமீறுவது அப்பட்டமான சட்டவிரோத செயலாகும்.இது தொடர்பில் உரிய இடங்களுக்கு தெரிவிப்பதாக மக்களிடம் கூறினேன். என்றார்.

Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila