அர்ப்பணிப்புடன் செயலாற்றுவார் என்ற நீதியரசர் விக்னேஸ்வரனின் செயற்பாட்டினை, அரசியல் எதிரிகள் அல்ல தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருப்பவர்களே, விமர்சிப்பதுடன், கொள்கை பற்றுள்ள தமிழ் மக்களின் உள்ளம் வெந்து கொண்டிருப்பதை இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருப்பவன் என்ற ரீதியில் அடையாளம் கண்டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார். தேர்தலில் புறந்தள்ளப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில், தமிழ் தலைவர்கள் வலியுறுத்தும் எமது இனத்தின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு சர்வதேசத்தின் உதவி இன்றியமையாதது என்று, வலியுறுத்துகின்ற இந்த வேளையில், சர்வதேசத்தின் உதவியை சரியாக பெற்றுத்தர ஆளுமையுடைய, திறமையுடைய அர்ப்பணிப்புடைய மதிப்பிற்குரிய நீதியரசர் விக்னேஸ்வரனின் கரத்தினை தமிழ் மக்கள் பலப்படுத்த வேண்டுமென்ற எண்ணத்துடன், முதன்மை வேட்பாளராக தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ளேன். தமிழ் மக்கள் அரசியலில் முதிர்ச்சியுடையவர்கள். அவர்களின் தீர்மானம் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவகையில், இருந்து வந்துள்ளார்கள் என்பதனை எமது அரசியல் வரலாறு பதித்து வைத்துள்ளது என்றார். |
முதலமைச்சர் விக்னேஸ்வரனின் கரங்களைப் பலப்படுத்தவே தேர்தலில் போட்டியிடுகிறேன்! - முன்னாள் நீதிபதி விக்னராஜா
Related Post:
Add Comments