மகிந்த ராஜபக்ச உட்பட கூட்டத்தில் உரையாற்றிய பெரும்பான்மையானோர் புலிகள் குறித்து கருத்து வெளியிட்டு இனவாதத்தைக் கக்கிப் பரப்புரையை ஆரம்பித்தனர்.
மகிந்த
இன்று வடக்கு- கிழக்குக்குச் செல்ல எவரும் அச்சப்படுகின்றனர்.வடக்கில் இன்று குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன.
பெண்கள் வீதியில் இறங்கிச் செல்ல முடியாத நிலைமை உள்ளது.புலிகள் உருவான காலத்தில் இதுபோன்ற நிலைமைதான இருந்தது.இவற்றினூடாக நாட்டைப் பிரிக்கப் பார்க்கின்றார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்றார்.
சரத் என் சில்வா
ரணில் விக்கிரமசிங்க புலிகளிடம் மண்டியிட்டு என்ன செய்தார்? சமாதான ஒப்பந்தத்தினூடாக பிரபாகரன் பலமடைந்தார்.அவரது பக்தர்கள் அப்படியே இருந்தன.புலிகளின் தொடர்hடல் மத்திய நிலையமாக சம்பூரில் இரு கோபுரங்களை நோர்வேயின் நிதி உதவியுடன் ரணில் அமைத்துக் கொடுத்தார்.இதனூடாக எமது இராணுவத்தினர் என்ன செய்கின்றார்கள் என்பதை புலிகளால் அறிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது என்றார்.
விமல் வீரவன்ச
புலிகள் தொடர்பில் கருத்து வெளியிட்டதுடன் நாட்டில் ஏற்பட்டிருந்த பாதுகாப்பற்ற நிலைமை புலிகளால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்பன குறித்தும் கருத்து வெளியிட்டிருந்தார்.