முன்னணியின் சார்பில் அந்த மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடும் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, கூட்டத்தில் கலந்து கொள்ள போவதில்லை என தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் ஒரே மேடையில் அமர விரும்பவில்லை எனக் கூறி அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார். எனினும் கூட்டத்தை ஏற்பாடு செய்வதற்கான உதவிகளை வழங்க அவர் இணங்கியுள்ளார்.
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் கல்வி சேவைகள் அமைச்சராக பதவி வகித்த துமிந்த திஸாநாயக்க, அரசாங்கத்தில் இருந்து மைத்திரிபால சிறிசேன வெளியேறிய போது அவருடன் இணைந்து துமிந்தவும் வெளியேறினார்.
மகிந்த ராஜபக்சவின் எதிர்ப்பாளர்களில் சிலர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்த விலகி நல்லாட்சிக்கான ஐக்கி தேசிய முன்னணியின் கீழ் போட்டியிடும் நிலையில், துமிந்த திஸாநாயக்க உட்பட சிலரே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவானவர்களுக்கு எதிரான செயற்பாடுகளை மகிந்த ராஜபக்ச தரப்பினர் மேற்கொண்டுள்ளதாகவும் மகிந்த தரப்பின் பிரதான இலக்கு துமிந்த திஸாநாயக்க எனவும் கூறப்படுகிறது.