பாராளுமன்றப் பொதுத் தேர்தல் 2015 - தமிழர் தரப்பிலிருந்து ஒரு பார்வை எனும் தலைப்பிலான கருத்துப் பகிர்வும் கலந்துரையாடலும் தமிழ் சிவில் சமூக அமையத்தின் ஏற்பாட்டில் வவுனியா இலங்கைச் செஞ்சிலுiவைச் சங்க மண்டபத்தில் (பூங்கா வெளி வீதி (ழகக pயசம சழயன), மன்னார் வீதி, வவுனியா) 31 (வெள்ளி) யூலை 2015 அன்று காலை 10.00 மணியளவில் ஒழுங்கு செய்யப் பட்டிருந்தது.
ஆயுத மோதல்களின் பின் முக்கியத்துவம் பெறும் ஒரு காலப்பகுதியில் வரும் இப்பாராளுமன்றப் பொதுத் தேர்தல் தமிழர்களின் கூட்டுப் பிரக்ஞை தொடர்பில் தாக்கமான கேள்விகளை தமிழர் தரப்பின் முன்வைக்கிறது. இதுபற்றி பலரும் கவனங்கொண்டு வருவதன் வெளிப்பாடாக இக்கருத்துப் பகிர்வும் கலந்துரையாடலும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
ஆயுத மோதல்களின் பின் முக்கியத்துவம் பெறும் ஒரு காலப்பகுதியில் வரும் இப்பாராளுமன்றப் பொதுத் தேர்தல் தமிழர்களின் கூட்டுப் பிரக்ஞை தொடர்பில் தாக்கமான கேள்விகளை தமிழர் தரப்பின் முன்வைக்கிறது. இதுபற்றி பலரும் கவனங்கொண்டு வருவதன் வெளிப்பாடாக இக்கருத்துப் பகிர்வும் கலந்துரையாடலும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
அண்மையில் மறைந்த முன்னாள் இந்திய சனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் நினைவாக மௌனப் பிரார்த்தனையுடன் நிகழ்வு ஆரம்பமாகியது. தமிழ் சிவில் சமூக அமையத்தின் இணைச் செயலாளரின் அறிமுகவுரையில் தமிழ் சிவில் சமூக அமையம் பற்றிய குறிப்பின் பின்னர் நிகழ்வின் ஒழுங்கு பின்வருமாறு விபரிக்கப்பட்டது: பாராளுமன்றப் பொதுத் தேர்தல் 2015 நடைபெறும் சூழமைவை தமிழ் சிவில் சமூக அமையத்தின் இணைப் பேச்சாளர் விளக்குவார். தொடர்ந்து‘நீண்டகால தமிழர் நலன் நோக்கில் நின்று பாராளுமன்றப் பொதுத் தேர்தலை ஆராய்தல்- யாருக்கு வாக்களிப்பது?’ எனும் தலைப்பில் மூத்த பத்திரிகையாளர் முத்தையா சிவலிங்கம் அவர்கள் கருத்துப் பகிர்வு செய்வார். அதனைத் தொடர்ந்து பங்குபற்றுவோர் கலந்துரையாடல் நடைபெறும்.
நிகழ்வின் எந்தக் கட்டத்திலும் குறிப்பாகக் கலந்துரையாடலின் போது எந்தக் கட்சிகளையோ, அரசியல் வாதிகளையோ குறிப்பிட்டு அல்லது பெயர் குறித்து கருத்தாடலில் ஈடுபடவேண்டாம் என்று இணைச் செயலாளரினால் வலியுறுத்திக் கேட்டுக்கொள்ளப்பட்டது.
தமிழ் சிவில் சமூக அமையம் பற்றிய குறிப்பில் பின்வருவன அடங்கியிருந்தன:
- தமிழ் தேசியத்தை நேசிப்பவர்களின் சுய ஆர்வத்தினடிப்படையில் உருவாகிய அமைப்பு.
- குறிப்பிட்ட ‘தமிழ் சிவில் சமூக அமையம்’ எனும் பெயர் ஆரம்பத்தில் இருக்கவில்லை.
- 2010ம் ஆண்டில் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்தவர்களுக்காக நினைவேந்தலில் இவ்வமைப்பு ஈடுபட்டது.
- அமைப்பின் கொள்கைகள் ‘திம்புக் கோட்பாடுகளை’ அடிப்படையாகக் கொண்டவை.
- அமைப்பின் அடிப்படை நோக்கங்களில் ஒன்று கருத்தாடல் மற்றும் கருத்து வெளிப்பாட்டுக்கான தளத்தினை ஏற்படுத்திக் கொடுத்து பொதுமக்கள் மத்தியில் நீண்டகால நலன்சார்ந்த சரியான அடிப்படைகளைக் கொண்ட கருத்துரு வாக்கத்தினை வசதிப்படுத்துதலும் ஆகும். மக்கள் தம் தலைவிதி தொடர்பில் முடிவெடுக்கும் தளத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது இதன் நோக்கமாகும்.
- அமைப்பில் வேறுபட்ட, வித்தியாசமான கருத்துக்கள் உள்ளோர் அங்கம் வகிக்கிறார்கள். அவர்கள் தமிழ் தேசியம் தொடர்பிலும் அடிப்படைக் கோட்பாடு மற்றும் அணுகுமுறைகளிலும் ஒத்த கருத்துடையவர்கள்.
- தமிழ் சிவில் சமூக அமையத்தில் வடக்கு கிழக்கைச் சேர்ந்த 120 ஆர்வலர்கள் அங்கத்துவமாக இருக்கிறார்கள். அழைப்பாளராக வணக்கத்துக்குரிய மன்னார் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்களும் இணைச் செயலாளர்களாக திரு. சிங்கம், திரு. இராஜன் அவர்களும் இணைப் பேச்சாளர்களாக திரு. குருபரன், திரு. எழில் அவர்களும் தற்போது இருக்கிறார்கள். வடக்கு கிழக்கின் ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் இணைப்பாளர்கள் இருக்கிறார்கள்.
- இன்று வரையிலும் பல்வேறு தமிழர் நலன்சார்ந்த விடயங்களில் தேவையான சந்தர்ப்பங்களில் அறிக்கையினூடாக காத்திரமான கருத்துக்களை தமிழ் சிவில் சமூக அமையம் வெளிப்படுத்தியும் பரிந்து பேசுதலில் ஈடுபட்டும் வந்துள்ளது.
பங்குபற்றியோர் எழுப்பிய தமிழ் சிவில் சமூக அமையம் பற்றிய கேள்விகளுக்கு பின்வருமாறு பதில், விளக்கம் அளிக்கப்பட்டது.
- தமிழ் சிவில் சமூக அமையம் இன்னமும் பதிவுசெய்யப்படவில்லை. அதற்கென யாப்பு உருவாக்கப்பட்டு அது நடைமுறையில் உள்ளது. பொருத்தமான, தேவையேற்படும் சந்தர்ப்பத்தில் பதிவுசெய்யப்படும்.
- பெண்கள் தமிழ் சிவில் சமூக அமையத்தில் அங்கத்துவம் வகிக்கிறார்கள். ஆனால் ஒப்பீட்டளவில் எண்ணிக்கை மிகவும் குறைவானதாகும். பெண்கள் அங்கத்துவம் பெறுதில் தடைகள் இல்லை.
- யாப்பினடிப்படையில் தமிழ் சிவில் சமூக அமையத்தின் அடிப்படைக் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளுபவர் அங்கத்துவம் பெறுவதற்குத் தகுதியுடையவர்.
பாராளுமன்றப் பொதுத் தேர்தல் 2015 நடைபெறும் சூழமைவை விளக்கும் பகிர்வில் பின்வரும் கருத்துகள் குறிப்பிடப்பட்டன:
- ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னரான சூழல்.
- கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை நிகழும் சூழல். இது ஐ.நா. வின் இனப்படுகொலை தொடர்பான பட்டயத்தில் உறுப்புரை 2 செயற்பாடுகளின் உள்நோக்கங்களின் அடிப்படையில் இது தெளிவுபடுத்தப்பட முடியும்.
- பல ஆய்வாளர்களின் முடிவுகளின் அடிப்படையில் தமிழர் தரப்பு அரசியல் ‘எதிர்ப்பு அரசியல்’ ஆகும். இதனை மையப்படுத்தியே தமிழர் தரப்பு அரசியல் நடவடிக்கைகள் நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஒரு கட்டத்திற்குப் பின்னர் தமிழர் தரப்பினர் ‘இணக்கப்பாட்டு அரசியல்’ இற்குள் இழுக்கப்பட்டோம்.
- இதன்போது தமிழ் தேசியத்திலிருந்து தமிழ் தேசிய நீக்கத்திற்குள் இழுத்துச் செல்லப்படுகிறோம்.
- தமிழர் வாக்குகளைப் பொறுத்தவரையில் ‘இன அடையாள அரச எதிர்ப்பு வாக்குகள்’ என்ற நிலையிலிருந்து ‘பழிவாங்கல் வாக்குகள்’ ஆக மாறியது.
- சிலர் தமிழ் தேசியம் என்பதை ஆயுதப் போராட்டம் என்பதாகப் பார்க்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. ஏற்கனவே இருந்த தமிழ் தேசியத்தைக் காப்பதற்கான முனைப்புகளே ஆயுதப் போராட்டமாக உருமாற்றம் பெற்றது.
- 2009 இற்குப் பின்னர் இலங்கையைப் பொறுத்தவரையில், ஏனைய உலக வரலாறுகளைப் போலவே,‘அடையாளத்தை ஒன்றுபடுத்துதல்’ (உழளெழடனையவழைn ழக னைநவெவைல) என்பது முன்னெடுக்கப்பட்டு வருகிறது (உூம்: சிறீ லங்கா ரெலிகொம்மின் ‘ஒரே தேசம் ஒரே குரல்’ எனும் சந்தைப்படுத்தல் வாசகம்).
- இந்தச் சூழமைவில் பாராளுமன்றத் தேர்தல் மாற்றம் எதனையும் தரப் போவதில்லை. அவ்வாறெனில் பாராளுமன்றத் தேர்தல் ஏன் எனும் கேள்வி எழுகிறது. இதற்கு விடைதேடும் வகையில் இனிவரும் கருத்துப் பகிர்வும் கலந்துரையாடலும் அமையும் என எதிர்பார்க்கலாம்.
இதனைத் தொடர்ந்து முத்தையா சிவலிங்கம் அவர்களின் ~யாருக்கு வாக்களிப்பது?| எனும் தொனிப் பொருளிலான கருத்துப் பகிர்வு இடம்பெற்றது. அவர் இது விரிவுரையாக இல்லாமல் ஒரு கலந்துரையாடல் அரங்காக இருக்க வேண்டும் எனும் வேண்டுகோளுடன் தனது பகிர்வைத் தொடக்கினார். இதன்போது பகிரப்பட்ட கருத்துகளின் குறிப்புகள் கீழே தரப்பட்டுள்ளன.
- இலங்கை வெள்ளையர் ஆட்சியிலிருந்து விடுபட்ட 1948 தொடங்கி தமிழர் உரிமைக் கோரிக்கைகள் வௌ;வேறு அரசியல் அணுகுமுறைகளுக்கூடாக வளர்ச்சி கண்டு வந்துள்ளன.
- சமஷ்டி, சம அந்தஸ்து என்ற கோட்பாடுகள் வடக்கு கிழக்கு தமிழர்களை இழுபறிப்பட வைத்த காலமும் ஒன்றிருந்தது.சுதந்திரத்துக்கு பின்னரான பெரும்பான்மை இனவாத அரசுகள் தமிழ் பேசும் சிறுபான்மை மக்களுக்கெதிராக செயற்பட்டதோடு வன்முறைகளையும் அவ்வப்போது கட்டவிழ்த்து வந்துள்ளன.
- சுதந்திரம் கிடைத்த அடுத்த ஆண்டே இந்திய வம்சாவழி மலையக தமிழர்களின் குடியுரிமை பறிக்கப் பட்டமை,பாரம்பரியமாக வாழ்ந்து வந்த கிழக்கின் தமிழர் விகிதாரசாரத்தைக் குறைக்கும் வகையில் பெரும்பான்மை இனக் குடியேற்றங்கள் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டமை, காலத்துக்குக் காலம் தமிழர்களை இடம்பெயர வைக்கும் வன்முறை நடவடிக்கைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டமை என்பன இவற்றுக்கான சான்றுகளாகும்.
- இந்த நடவடிக்கைகள் தமிழர் தரப்பில் தற்காப்புக்கும் உரிமை வாழ்வுக்குமான எண்ணத்தை உருவாக்கியதோடு தமிழ்த்தேசியம் என்ற கருத்துருவாக்கத்துக்கும் வழி வகுத்தது.
- இவற்றுக்கெதிராக தமிழர்களின் பெரும்பான்மைப் பிரதிநிதித்துவத்தை வடக்கிலும் கிழக்கிலும் பெற்ற அப்போதைய தமிழரசுக் கட்சி சாத்வீக வழியிலான அறப்போராட்டங்களையும் அமைதிப் பேரணிகளையும் சத்தியாக்கிரகங்களையும் மேற்கொண்டது.
- இலங்கையின் இரண்டு பெரும் ஆட்சிக் கட்சிகளோடும் அவ்வப்போது மேற்கொண்ட ஒப்பந்தங்களும் அவை கிழித்தெறியப்பட்டதும் அரசியலமைப்பு மாற்றங்கள் மற்றும் புதிய அரசியலமைப்பு ஆக்கங்களின் போது தமிழர் தரப்பின் பங்கேற்புக்கு இடமளிக்கப்படாமை என்பனவே வரலாறாக இருந்தது.
- வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகம், சுயாட்சி என்ற நியாயமான அடிப்படையில் முன்வைக்கப்பட்ட அதிகாரப்பரவலாக்கற் கோரிக்கைகள் செவிசாய்க்கப் படவில்;லை. பிரிவினைக்கு வழிவகுக்கும் கோரிக்கைகள் அவை எனக்கூறி பேரினவாத அரசுகளால் தூக்கி எறியப்பட்டன.
- ஆயுதங்களற்ற அறவழி எதிர்ப்புக்களும் ஜனநாயக நடவடிக்கைகளும் தூஷிக்கப்பட்டதோடு ஆயுதப்படைகளை ஏவி அடித்து உதைத்து அடக்கப்பட்டன. தனிச்சிங்களம் என்ற சட்ட அமுலாக்கத்திற் கெதிராக மேற்கொள்ளப்பட்ட காலி முகத்திடல் சத்தியாக்கிரகம் இதற்கு வலுவான சான்றாகும்.
- அரச ஆதரவிலான வன்முறைகள் கட்டவிழ்க்கப்பட்டு மக்கள் அல்லற் பட்டபோதெல்லாம் இலங்கையின் மற்றைய பாகங்கள் பாதுகாப்பில்லை என்ற நிலையில் கடல்வழி, தரைவழி, வான்வழியாக தமிழர்கள் வடக்கிற்கும் கிழக்கிற்கும் அனுப்பி வைக்கப்பட்டனா.; அவர்களது பாரம்பரிய பூமியே அவர்களுக்குப் பாதுகாப்பானது என அரசுகள் ஏற்றுக் கொண்டதை இது காட்டுகிறது.
- இதைத் தொடர்ந்து இளைய தலைமுறையினர் பின்நாட்களில் ஆயுதமேந்திப் போராடத் தலைப் பட்டனர். ஆயுத அமைப்புக்களில் நுPசுடுகுஇ நுசுழுளுஇ Pடுழுவுநுஇ வுநுடுழு போன்றனவும் இறுதிவரை டுவுவுநு யும் தமிழ்; இன விடுதலைக்கான போர்களை நடத்தினர். மேற்குலகத்தினதும் இந்தியாவினதும் உதவிகளுடன் யுத்தம் இறுதியாக வல்லடித்தனமாக முடிவுறுத்தப்பட்டது. போருக்குள் வாழ்ந்தபோது இருந்த துன்பங்களுக்கு மேலாக துன்பங்கள் பன்மடங்காகி அடுத்தவரை நம்பி வாழும் அகதி வாழ்வுக்குள் தமிழர்களைத் இது தள்ளிவிட்டது.
- அதிகாரப் பரவலாக்கல் என்ற கோஷத்தின் கீழ் காலத்திற்குக்காலம் மாவட்ட சபைகள் மற்றும் பிராந்திய சபைகள் என்று உருவாக்கப்பட்ட போதும் உருப்படியாக அவைகள் எதையும் சாதிக்கவில்லை. இறுதியாக 1987 காலப்பகுதியில் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் உருவாக்கப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தின் ஏற்பாடாக மாகாண சபைகள் வந்தமையும் அப்போதைய முதலமைச்சர் எதையுமே சாதிக்கமுடியாத நிலையில் தனிநாட்டுப் பிரகடனம் ஒன்றைச் செய்துவிட்டு இந்தியாவிற்குப் பறந்து விட்டமையும் தெரிந்த வரலாறாகும். இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கு இப்போது இரண்டாக்கப்பட்டுவிட்டது.
- 13வது திருத்தச்சட்டம் என்பது ஒற்றையாட்சி அமைப்பின்கீழ் மத்திய அரசிடமும் அதன் நேரடி முகவராக இருக்கக்கூடிய மாகாண ஆளுநரிடமும் அதிகாரங்கள் பாதுகாப்பாக இருக்கக்கூடிய ஏற்பாடாகும். இது தமிழர் பிரச்சினைத் தீர்வுக்கு எந்த வகையிலும் உதவப்போவதில்லை என்பது போருக்குப்பின்னான தமிழ்தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபையினூடாக மேலுமொரு அனுபவமாகி விட்டது.
- இவ் வரலாற்றுப் பின்னணியில் பிரிபடாத ஐக்கிய இலங்கைக்குள் தமிழர்களை ஒரு தேசமாக (யேவழைn) அங்கீகரித்து அவர்களுக்கான பாரம்பரிய வரலாற்று ரீதியான வாழிடத்தில் (இணைந்த வடக்கு கிழக்கு) அதற்கான சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் அர்த்தமுள்ள அதிகாரப் பரவலாக்கலே பயனள்ளதாகவும் நிலைபேறான தீர்வுக்கு வழி வகுப்பதாகவும் அமையும் எனும் முடிவுக்கு வரலாம்.
- காலம் கடத்தாத தொடர் நடவடிக்கைகளும் தீர்க்கமான தலைமைத்துவமும் இதற்கு இன்றியமையாதன. சுதந்திரமாகவும் நீதியாகவும் ஜனநாயக வழிமுறைகளிலும் பற்றுறுதியோடு இதை முயன்று சாதிக்கும் உத்திகள் உருவாக வேண்டும். நாகரிக அரசியற்; பண்பாட்டுக் களத்தில் பங்கேற்பு சனநாயகச் சிந்தனை பரவலாக விதைக்கப்பட வேண்டியது அவசியம்;.
- தமிழ்த் தேசியம் கடந்த காலங்களில் கோட்பாட்டுக் குணாம்சங்களோடு கூடிய உறுதியானதொரு தலைமைக் கட்டமைப்பை வளர்க்க வழிசமைக்கத் தவறிவிட்டது. சாகச உணர்ச்சித் தலைமைகளையும்; சீரழிவுச் சிந்தனைகளையுமே கூடுதலாகப் பிரசவித்து வந்துள்ளமையும் தமிழர் வரலாற்றுத் தடத்தின் சோக நிகழ்வுகளாகும் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
- இன உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கு வெளிப்படைத்தன்மையும் செயலூக்கமும் கருத்திற் கொள்ளப்படுதல் காலத்தின் கட்டாயமாகும். தமிழர் நலன் சார்ந்த சமூகக் கடப்பாடு எதையுமே கருத்திற் கொள்ளாதவர்கள் எதிர்வரும் வரும் தேர்தலில் தெரிவு செய்யப்படத் தகுதி அற்றவர்களாவர்.
- மேலும் எதிர்வருங்காலங்களில் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளையும், அவர்களது அரசியல் நடவடிக்கைகளையும் அசைவுகளையும் கவனிக்கவும் கண்காணிக்கவும் ஏற்ற தருணங்களில் இடித்துரைக்கவுமான பலமான மக்கள் கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்படுவது மிகமிக அவசியமானது. அது தமிழ்த்தேசிய அரசியற் பரிமாணத்தில் ஒரு கனதியையும் ஏற்படுத்தும். தமிழ் சிவில் சமூக அமையம் கருதுவது போல அது ‘தமிழ் தேசிய சபை’ என்பதாக அமையலாம்.
- இனப் பிரச்;சனைத் தீர்வுக்கான அடிப்படைகளாக திம்புக் கோட்பாட்டைக் கொள்ளுவதே அறிவார்ந்ததாகும். திம்புக் கோட்பாடு என்பது 1985ம் ஆண்டு பூட்டான் தலைநகரான திம்புவில் தமிழர் தரப்புகளாக நு.P.சு.டு.கு இ நுசுழுளுநுஇ டுவுவுநுஇ Pடுழுவுநுஇ வுநுடுழுஇ மற்றும் தமிழர் விடுதலைக்கூட்டணி ஆகிய அமைப்புகள் பங்கு கொண்டு தமிழர் பிரச்சினைத் தீர்வின் அடிப்படையாக நான்கு முக்கிய அம்சங்களை முன்வைத்தன. அதன்படி,
01. இலங்கைத் தமிழரை ஒரு தேசமாக அங்கீகரித்தல்
02. அவர்களுக்கு தாயக பூமி (வடக்கு கிழக்கு) ஒன்று இருப்பதாக அங்கீகரித்தல்.
03. அந்த தாயகப்பூமியின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தல்.
04. இலங்கைத் தமிழர்கள் யாவரினதும் குடியுரிமை மற்றும் அடிப்படை உரிமைகளை அங்கீகரித்தல் என்பனவாகும்.
- தேசம் (யேவழைn) என்ற பதம் அரசியல் சட்டத்தோடு தொடர்புடையது. அதன்படி ‘ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு குறித்த நிலப்பரப்பைக் குடிபகுதியாகக் கொண்டு ஒரே மொழியைப் பேசுகிற ஒரே வகையான மரபு, பண்பாடுகளையுடைய வரலாற்றுத் தொடர்ச்சி கொண்ட இம்மாதிரியான ஏனைய மக்கட் குழுமங்களிலிருந்து அவர்களது இன அடையாளம் தன்மை என்பவற்றின் அடிப்படையில் பிரித்தறியக்கூடிய மக்கட் தொகுதியாகும்’.
- இந்தப் பின்னணியின் புரிதலுடன் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கான தீர்வு அணுகப்படவேண்டும், அடையப்பட வேண்டும் என்பது அரசறிவியலார் அவாவாக இருப்பது நியாயமான தொன்றாகும்.
- இப்போதைய நிலையில் எதிர்ப்புமுறை அரசியல், இணக்கப்பாட்டு அரசியல் என்ற இரு வேறு தளங்களில் தமிழர் பிரச்சினைத் தீர்வுக்கான பார்வை தள்ளாடிக் கொண்டிருக்கிறது.
- அரசில் அங்கம் வகித்து அபிவிருத்தியில் பங்கெடுத்தல் என்பது அடங்கிப்போதல் என்பதாகவே அர்த்தப்படும். இது தட்டிக் கேட்கிற, முறைகேடுகளுக்கெதிராகக் குரல் கொடுக்கிற வீரியத்தை அழித்துவிடும். வலியுறுத்த வேண்டியதை வலியுறுத்தியும் வற்புறுத்தியும், கொண்ட கொள்கைக்காக வாதாடக்கூடிய அரசியல் நேர்மையை அது வேரோடு பிடுங்கிவிடும் ஒருவகையான தரகு வியாபாரக்;குணத்;தையும் கொண்டுவந்து விடக்கூடிய ஆபத்தும் அதில் உள்ளது.
- தந்திரோபாய உத்திகளைத் தேவையேற்படும்போது கையாள வேண்டும் என்பதும் கூட, மக்களுக்கு உதவுதல் என்ற சாக்கில் சந்தர்ப்பவாதத்தை நியாயப் படுத்துவதாகவும் அமைந்து விடலாம். மக்களும் அவர்தம் எதிர்பார்ப்புகளும் காட்டிக் கொடுக்கப்படக்கூடிய அபாயமும் இதிலுள்ளது.
- இவற்றை எல்லாம் சரியாகப் பகுத்தாய்ந்து எதிர்வரும் தேர்தலின் தமிழ்த்தேசிய அரசியற் களத்தில் உண்மையானவராகவும், உறுதிபாடுள்ளவராகவும் தமிழ் தேசிய தலைமைத் தகுதிக்கான குணாம்சங்களைக் கொண்டவராகவும் யார் இருக்கிறாரோ அவருக்கு வாக்களிப்பதே எதிர்கால அரசியல் நடவடிக்கைகளுக்கு உதவுவதாக அமையும்.
- அறிவுபூர்வமாக விடயங்களை அணுகாது, வெறும் வாக்காளர்களாகவே தொடர்தல் என்பது தாங்க முடியாத அவலத்துள் நம்மைத் தள்ளிவிடும். இந்த அபாயம் ஆழமாக உணரப்பட வேண்டும்.
- களத்தில் இறங்கி காசு செலவழித்து பின் பிரதிநிதிகளாகி இருமடங்காக உழைக்க வழி தேடுகிறவர்கள் விடயத்திலும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
- 13 அல்லது 13ூ என்பதாக இல்லாமல் திம்புக் கோட்பாட்டின் அடிப்படையிலான தீர்வே மாற்றவும் ஏமாற்றவும் முடியாத நிலைபேறான தீர்வாக அமைய முடியும் என்பதைத் தெளிந்து தேர்வோம்; தீர்வுக்காக வாக்களிப்போம்.
இக்கருத்துப் பகிர்வின் பின்னர் பங்குபற்றுவோர் கலந்துரையாடல் ஆரம்பமாகியது. கலந்துரையாடலை வசதிப் படுத்தியவர் (த.சி.ச.அ. இணைச் செயலாளர்) மாற்றுக் கருத்துக்கள் கருத்துக்களாகவே பார்க்கப்படுதல் வேண்டும் என்றும் அல்லாது ஒரு குறிப்பிட்ட நபருக்குரியதாக எடுத்தாளப் படக்கூடாது என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார். கலந்துரையாடலின் போக்கு தனியே தேர்தலை மையப்படுத்தியல்லாமல் தமிழர் பிரச்சனையின் தீர்வினை மையப்படுத்தியும் அமைந்தது. கலந்துரையாடலின் போதுபரிமாறப்பட்ட கருத்துகள் வருமாறு:
- தமிழ் தேசிய சபை என்பது தமிழர் அனைவரதும் பிரதிநிதித்துவத்தை ஒருங்கிணைத்து தனது செயற்பாடுகளுக்கு பொறுப்புக் கூறும்வகையிலமைந்த ஒரு கூட்டுப் பொறுப்பு அமைப்பாகும். பாலஸ்தீனத்தில் யாசீர் அரபாத் காலத்தில் அமைக்கப்பட்ட ‘பாலஸ்தீன தேசிய சபை’ என்பதை ஒத்ததாகும்.
- தமிழ் சிவில் சமூக அமையத்தின் ஏனைய இனக் குழுமங்கள் தொடர்பிலான நிலைப்பாடு பற்றிய தெளிவேற்படுத்தும்படி கோரப்பட்டது. முஸ்லிம்கள் மலையகம் வாழ் தமிழர்கள் தமது தலைவிதி தொடர்பில் தாமே முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர்களில் எமது கொள்கைகளை ஏற்றுக் கொள்ளுபவர்கள் எம்முடன் இணைந்து வேலைசெய்ய முடியும் என்றும் கூறப்பட்டது.
- தமிழர் தரப்பு அரசியல் செயற்பாடுகளின் தவறுகள் பற்றிய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு தமிழ் சிவில் சமூக அமையம் அவ்வாறான திசையில் பயணிக்கக் கூடாது என்று பங்குபற்றுனர் ஒருவரால் குறிப்பிடப்பட்டது. தமிழ் சிவில் சமூக அமையம் என்பது கட்சி அரசியலுக்கான அமைப்பு அல்ல என்பதுவும்அமையத்தின் நம்பிக்கை மக்களிடத்திலேயே உள்ளது - அதாவது தமிழ் சிவில் சமூக அமையம் என்பது மக்களுடைய அரசியலை முன்னெடுக்கும் அமைப்பாகவே எப்போதும் இருக்கும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டது.
- தற்போது எமது மக்கள் ஒருபக்கம் உரிமைகளுக்காகவும் இன்னொரு பக்கம் வாழ்வாதாரத் தேவைகளுக்காகவும் போராட வேண்டிய நிலையிலுள்ளனர். இந்நிலையில் பொருளாதார மேம்பாட்டை மையப்படுத்திய தேர்தல் பிரசார உத்திகளால் மக்கள் ஈர்க்கப்படுவர். இது தவிர்க்க முடியாதது என்பதுடன் தேர்தலில் தாக்கம் செலுத்தப் போவதும் யதார்த்தமாகும். இந்நிலையை தமிழ் சமூகம் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என்னும் கேள்வி எழுப்பப்பட்டது. இதனை எதிர்கொள்ளும் ஒரு வழிமுறையாக தமிழ் சிவில் சமூக அமையம் போன்ற சிவில் அமைப்புகள் பல தரப்பிலுள்ளோரை இணைத்து பிரதிநிதித்துவ அமைப்பாக இன்னும் வலுவான கட்டமைப்பாக வருதல் வேண்டும். அவ்வாறான நிலையிலேயே கருத்து மயக்க நிலைகளை திடமாக எதிர்கொள்ளலாம் எனும் கருத்து கலந்துரையாடியவர்களால் முன்வைக்கப்பட்டது.
- பங்குபற்றுனர் ஒருவர் அரச பத்திரங்களில் தமிழரை ‘இலங்கைத் தமிழர்’ எனவும் சிங்களவரை ‘சிங்களவர்’ எனவும் பதியவேண்டி வருகிறது. இது எம்மை (தமிழரை) உரித்து சார்ந்து வேறுபடுத்துவதான தோற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் பிரஸ்தாபித்தார். அரசியல் யாப்பில் மாற்றங்கள் ஏற்படுத்த முற்பட வேண்டிய விடயங்கள் இவை என்பது தெளிவுபடுத்தப்பட்டது. இவை போன்ற விடயங்களைப் பற்றிய கலந்துரையாடல் பிறிதாக, மேலும் விரிவாக நடைபெற வேண்டும் என்பது எடுத்துக் கூறப்பட்டது.
- தேர்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தமது செயற்பாடுகளுக்காகப் பொறுப்புக் கூறவேண்டிவர்கள். தவறும் பட்சத்தில் அதற்கான சூழலை (நாம்) மக்கள் ஏற்படுத்த வேண்டும் எனும் கருத்து முன்வைக்கப்பட்டது. இது தொடர்பில் ஐரோப்பிய நாடுகளில் ‘பின் பிரதிநிதித்துவ சனநாயக முறைமை’ (pழளவ சநிசநளநவெயவiஎந னநஅழஉசயஉல) இல் அழுத்தக் குழுக்கள் எவ்வாறு செயற்படுகின்றன என்பது பற்றிய பகிர்வு செய்யப்பட்டு அவ்வாறானதொரு வருவான அழுத்தக் குழுவை சிவில் அமைப்புகள் தோற்றுவிக்க வேண்டும் என்னும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
- தமிழ் சிவில் சமூக அமையம் சில சந்தர்ப்பங்களில் ஒரு கட்சியை ஆதரித்துக் கருத்து வெளியிட்டார்கள். தற்போது அவ்வாறு செய்யாமல் ஏன் வேறுமுறையில் தேர்தல் சூழலை அணுகுகிறார்கள் எனும் கேள்வி எழுப்பப்பட்டது. ஒரு கட்சியை ஆதரித்துக் கருத்து வெளியிட்ட சூழமைவு போர் முடிவின் பின்னராக வந்த வட மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்ளும் நிலைக்குரியதாகும். இது தமிழர் தரப்பு கூட்டாக ஒரு செய்தியைத் தெரிவிக்க வேண்டியிருந்த ஒரு சூழலில் ஆகும். அது தவறும்பட்சத்தில் தமிழ் தேசியத்திற்கு எதிரானவர்களின் கை ஓங்கும். இது வெளியாருக்கு தமிழரின் கருத்து தொடர்பிலான தவறான செய்தியைக் கொடுக்கும். அவ்வாறான செய்தியைக் கொடுக்கும் தேர்தல் விஞ்ஞாபனத்தையும் கருத்து நிலையையும் கருத்தில் கொண்டு அப்போது ஆதரவு நிலை வெளிப்படுத்தப்பட்டது. தற்போதைய பொதுத் தேர்தலின் சூழமைவு வித்தியாசமானது, இலங்கை முழுவதற்குமானது. தமிழர் தரப்பு ஒரு மறைமுக யுத்தத்தை – கட்டமைக்கப்பட்ட இனவழிப்பை எதிர்கொள்ளும் சூழலில் நடைபெறுகிறது. இவை தொடர்பான கருத்து நிலையும் இதனை எதிர்கொள்ளும் வழிமுறைகள் பற்றிய தெளிவும், அடிப்படைக் கோட்பாடுகளும் தமிழர் தரப்பின் தலைவிதி தொடர்பில் மிகவும் முக்கியமானவை. எனவே அவை சார்ந்தே வாக்களிப்பு தொடர்பிலான முடிவை எடுக்க வேண்டுமென தமிழ் சிவில் சமூக அமையம் கோருகிறது.
- தற்போது எல்லோரும் எல்லாக் கட்சிகளும் தழிழ் தேசியம் பேசுகிறார்கள். இவர்களில் உண்மையான நிலைப்பாட்டிலுள்ளவர்களை வாக்காளர்கள் இனங்காண்பதென்பது மிகவும் கடினமானதொன்றாகும்.
- கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் எவ்வளவு தூரத்திற்கு கிராம மட்டத்திற்குச் செல்கின்றதென்பது கேள்விக்குரியதொன்றாகும். இந்நிலையில் ‘தேசியத்திற்கு வாக்களித்தல்’ என்பது மக்களைச் சரியான தெரிவுகளுக்கு வழிப்படுத்தாது.
- எம்முடைய அனுபவங்கள் கசப்பானவை. மக்களுக்கு இது விடைகளில்லாத பல்தேர்வு வினாக்களுக்கு விடையளிக்க வேண்டியது போன்றதொரு நிலையாகும் என்னும் பங்குபற்றியவர் கருத்தொன்று கூறப்பட்டது. இக்கருத்துப் கருத்துப் பகிர்வு மற்றும் கலந்துரையாடல்கள் குழப்ப நிலைகளைத் தாண்டி ஒரு புரிதல் ஏற்பட வேண்டும் என்hதற்காகவே ஒழுங்கு செய்யப்படுகின்றன எனும் அமையத்தின் கருத்து முன்வைக்கப்பட்டது.
- மக்களுக்கான தேவைகள் அரச அதிகாரிகளாலும் மக்கள் பிரதிநிதிகளாலும் நிறைவு செய்யப்பட வேண்டும். அரச அதிகாரிகள் தட்டிக் கழித்தால் மக்கள் பிரதிநிதிகள் தட்டிக் கேட்கலாம். மக்கள் பிரதிநிதிகள் தட்டிக் கழித்தால் மக்களால் என்ன செய்ய முடியும் என்னும் ஆதங்கம் முன்வைக்கப்பட்டது. இந்தப் பின்னணியில் மக்கள் தேர்தல் தொடர்பில் பாராமுகமாக இருத்தல் பிழையாகும் என்பது வலியுறுத்திக் கூறப்பட்டது.
- தமிழ் சிவில் சமூக அமையம் ஒரு விடயத்தில் பிந்திவிட்டது எனும் கருத்து பங்குபற்றுனரொருவரால் கூறப்பட்டது. ஏன் அமையம் தமிழர் தரப்பு வாக்கு உடைந்துவிடாது தடுக்க முயற்சி செய்யவில்லை எனும் கேள்வி அப் பங்குபற்றுனரால் எழுப்பப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு தொடக்கம் தமிழ் தேசிய சபையை அமைக்கும் அமையத்தின் முயற்சி அவ்வாறான பிதிநிதித்துவத்தை காப்பாற்றுவதோடு பொறுப்புக் கூறலையும் கடப்பாடாக்கும் நோக்கத்தை உடையது என்பது விளக்கப்பட்டது. அதனைத் தாண்டி அமையம் கட்சி அரசியலுக்குள் செல்லாது என்பதுவும் தெளிவுபடுத்தப்பட்டது.
- மக்களுடைய நலிவான நிலை கட்சிகளின் வாக்கு வங்கியைப் பெருப்பிப்பதற்கு மட்டுமல்லாது வேறு நோக்கங்களுக்காகவும் பாவிக்கப்படுகிறது எனும் ஒரு கருத்து முன்வைக்கப்பட்டது.
- ஏன் தமிழ் அரசியல்வாதிகள் தமிழருக்கு உண்மையாக இருக்கிறார்கள் இல்லை என்னும் ஆதங்கம் பங்குபற்றுனரொருவரால் கூறப்பட்டது.
- மக்களின் வாழ்வுத் தேவைகள் மேலெழுந்து நிற்பதாலும் தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகளின் மீது மக்கள் மத்தியில் அதிருப்தி வளர்ந்து வருவதாலும் பிரதிநிதித்துவம் குறைவதற்கு வாய்ப்பிருக்கிறது.
- பெயர் குறிப்பிடப்படாத ஒரு சம்பவத்தை விளக்கி, பாராளுமன்ற உறுப்பினரொருவரைச் சந்திக்க வேண்டியேற்பட்டபோது, அவர் 19ம் திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவளித்த நிலையில் 20ம் திருத்தச் சட்டமூலத்திற்கும் ஆதரவளித்துவிட்டே திரும்புவார் என அவருடைய உதவியாளரிடமிருந்து கிடைத்த பதிலைக் குறிப்பிட்டு, 20ம் திருத்தச் சட்டமூலத்தின் கனதியையும் தமிழர் தலைவிதி தொடர்பில் அதன் தாக்கத்தையும் விளங்கிக் கொள்ளாத நிலையை இட்டு கவலையை வெளிப்படுத்தினார்.
- தமிழ் சிவில் சமூக அமையம் ஏன் வேட்பாளர்களை ஒரு பகிரங்க விவாதத்திற்கு அழைக்கவில்லை. இவ்வாறான கலந்துரையாடலை விடவும் தமிழர் தரப்பின் தற்போதைய நிலை மற்றும் தேவை தொடர்பில் அதுவே தாக்கமான தொன்றாக அமைந்திருக்கும் எனும் கருத்து முன்வைக்கப்பட்டது. அமையத்தின் சார்பில் அவ்வாறானதொரு பகிரங்க வேட்பாளர்கள்பங்குபற்றும் கலந்துரையாடல் ஒழுங்கு செய்ய ஒரு மாதத்திற்கு முன்பிருந்து முயற்சி செய்யப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி எனும் இரு கட்சிகளின் வன்னி மாவட்டத்திற்குரிய முதன்மை வேட்பாளர்கள் இக்கலந்துரையாடலில் பங்குபற்ற வருமாறு கோரப்பட்டனர். இவர்களில் ஒருவர் மட்டுமே சம்மதம் தெரிவித்த நிலையில், ஒரு கட்சிப் பிரதிநிதியுடன் நிகழ்வை ஒழுங்கு செய்யமுடியாமையால் அம்முயற்சி கைவிடப்பட்டது.
- மேற்குறித்த விடயம் தொடர்பில் ஏன் குறித்த இரு கட்சிகளை மாத்திரம் அழைக்கும் முடிவு எடுக்கப்பட்டது எனும் கேள்வி எழுப்பப்பட்டது. அவ்விரு கட்சிகளே தமிழர் அரசியல் தொடர்பில் நேரடியாகப் பங்கெடுக்கின்ற கட்சிகள் என்பதால் அவை அழைக்கப்பட்டன என விளக்கமளிக்கப்பட்டது.
- ஏன் கட்சித் தலைமையினூடாக அணுகாமல் வன்னி மாவட்டத்திற்குரிய முதன்மை வேட்பாளர்களை அழைக்க முயற்சித்தீர்கள் என வினவப்பட்டது. இவ்விரண்டும் கட்சிகளின் கூட்டமைப்புகளாக இருப்பதால் வௌ;வேறு கட்சிப் பிரதிநிதிகள் பற்றிய குழப்பத்தைத் தவிர்க்கவும் குறித்தவொரு கட்சியை முதன்மைப்படுத்தும் வகையிலான தோற்றத்தைத் தவிர்க்கவும் இவ்வாறு முடிவு செய்யப்பட்டது.
- ஏற்கனவே கருத்து நிலைகள் தொடர்பிலோ திட்டங்கள் தொடர்பிலோ ஒரு கேள்வி நிலையை ஏற்படுத்தாது போனதால் தேர்தலின் பின்னர் ஒரு வகையிலான பொறுப்புக் கூறலுக்கான கேள்வி நிலையை ஏற்படுத்த முயற்சிக்கலாம். உதாரணமாக ஒரு சிவில் சமூகமாக தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளிடம் 90 நாட்களுக்குள் மாவட்ட வேலைத்திட்டத்தைமுன்வைக்கும்படி கேட்கும் கோரிக்கையை முன்வைக்கலாம் என்னும். இதற்கு மறுதலிப்பாக வாக்களிப்பு முடிந்து தெரிவு முடிந்த பின்னர் அவர்கள் ஏன் பதில் சொல்ல வேண்டும் என்ற வினா எழுப்பப்பட்டது. அதாவது தெரிவின் பின்னரான சூழலில் பதில் சொல்ல வேண்டிய எந்தக் கடப்பாடும் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு இல்லை.
- ஒவ்வொரு கட்சிக்காரர்களும் பேசுகிறார்கள். ஆனால் யார் நிறைவேற்றும் இலக்கு உடையவர்கள் எனத் தெரியாத குழப்பநிலை ஒன்றே உள்ளது.
- பத்திரிகைகள் அரசியல் கட்சிகளின் கருத்தை வெளியிடுகிறார்கள். மக்களின் கருத்தையும் அவை வெளியிட வேண்டும் எனும் கோரிக்கை பல பங்குபற்றுனர்களிடமிருந்து எழுந்தது. (பத்திரிகைத் துறை சம்பந்தப்பட்டவர்களும் நிகழ்வில் பங்கெடுத்திருந்தனர்)
- நீண்டகால நோக்கில் (ஒரு சிவில் அமைப்பாக இருப்பதால்) தமிழ் சிவில் சமூக அமையம் வலுப்பட வேண்டும் எனும் கருத்து பலர் தரப்பிலிருந்தும் முன்வைக்கப்பட்டது. இதற்கு மாற்றுக் கருத்தாக சிவில் அமைப்புக்கள் இணைந்து வலுவான கட்டமைப்பாக உருவாக முடியும் என்பதுவும் கடந்த வரலாறுகளைப் போல் ஒரு அமைப்பிலோ அல்லது தலைவரிலோ தங்கியிருக்கும் பண்பினை மீண்டும் வளர்ப்பது அறிவுபூர்பமானதல்ல என்பதுவும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
- மக்களின், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதித்துவத்தைக் கொண்ட மாவட்ட சிவில் மகா சபைகளை உருவாக்கி பிரதிநிதித்துவ முறையில் இணைப்பதன் மூலம் வலுவான தமிழ் தேசிய சபையை உருவாக்கலாம் என்னும் கருத்து முன்வைக்கப்பட்டது.
தொடர்ந்து நன்றி தெரிவித்தலுடன் கலந்துரையாடல் நிறைவு செய்யப்பட்டது.
தமிழ் சிவில் சமூக அமையம்,
வவுனியா.