இதனடிப்படையில்,பதிவுகளை மேற்கொள்வதற்காக காணாமல் போனவர்களின் பெற்றோர், உறவினர்கள் பல மாவட்டங்களில் இருந்து வருகைத் தந்திருந்தனர். ஆனால் அங்கு பதிவுகளை முன்னெடுத்து வந்த காணாமல் போனோர் சங்கத் தலைவி எனக் கூறப்பட்ட ஸ்ரீகாந்தி பரீட்சயமற்றவராக காணப்பட்டதால், மக்கள் மத்தியில் அச்சம் தோன்றியது. அத்துடன் அவரை ஒளிப்படம் எடுத்துள்ளனர். அதனையடுத்து கோபமடைந்த குறித்த சங்கத்தலைவி தன்னை ஒளிப்படம் எடுத்த போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்க தலைவர் சகாதேவனை தாக்கியுள்ளார். அத்துடன், இன்னும் சற்றுநேரத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும், யாழ். மாவட்ட வேட்பாளருமான அங்கஜன் இராமநாதனின் கூட்டம் இடம்பெறவுள்ளதாகவும் அது முடிந்து அனைவரும் மதிய போசனம் அருந்தி செல்லுமாறும் கூறினார். அவரது இந்த பேச்சால் ஆத்திரமடைந்த காணாமல் போனோரின் உறவுகள், குறித்த பெண்ணிற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி கோஷமெழுப்பியதையடுத்து அங்கு பெரும் பதற்ற நிலை உருவாகியது. குறித்த இடத்திற்கு விரைந்து சென்ற யாழ்ப்பாணப் பொலிஸார் குறித்த இடத்தில் பதற்ற நிலையை குறைக்கும் நோக்கில் காணாமல் போனோர் சங்கத் தலைவி என தன்னை அடையாளப்படுத்தியவரை கைது செய்தனர். இந்நிலையில், சகாதேவன் பொலிஸ் நிலையத்தில் முன்வைத்த முறைப்பாட்டை அடுத்து அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்து யாழ். நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்டார். காணாமல் போனோர் சங்கத் தலைவி என தன்னை அடையாளப்படுத்தி, யாழில் காணாமல் போனவர்கள் தொடர்பான பதிவுகளை முன்னெடுத்துவந்த நபரை 50 ஆயிரம் ரூபா பெறுமதியான இரண்டு ஆள் பிணையில் செல்ல யாழ்.நீதவான் நீதிமன்ற நீதிபதி பொ.சிவகுமார் உத்தரவிட்டார். இதற்கிடையே காணாமற்போனோரை பதிவு செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இலலை என்று அங்கஜன் தெரிவித்துள்ளார். |
காணாமற்போனவர்களின் குடும்பத்தினரை அரசியலுக்குப் பயன்படுத்த முயன்ற அங்கஜன்!
Related Post:
Add Comments