சர்வதேச விசாரணை ஒரு கற்பனை நாடகம்-1


பாத்திரங்கள்:இரா.ச, மந்திரன், சேனா, தமிழ் மகன் 1, 2, பார்வையாளர்கள் 
பாட்டு-1:வென்று விட்டோமே... நாங்கள் வென்று    
               விட்டோமே...
பாட்டு-2:யாரை வென்றீர்கள்... நீங்கள் யாரை 
              வென்றீர்கள்?
பாட்டு-1:தமிழ் வாக்காளர்களை நாங்கள் வென்று 
              விட்டோமே... வென்று விட்டோமே...
தமிழ் மக்கள்:நதியயல்லாம் வற்றாத கடலைப் பார்த்து ஆறுதல் அடையும். அந்த கடலே வற்றிப் போனால்...
இரா.ச:மந்திரா! பதவி கிடைத்ததில் இருந்து எனக்கு எதுவுமே புரியவில்லை. உறக்கமுமில்லை. திருமலை யில் என் தலையில் மகுடம் வைத்தார்கள் ஏன் மந்திரா? 
மந்திரா:குறைந்த வாக்குகளுடன் வெற்றி பெற்ற நீங்கள் தலைவராகி விட்டீர்கள். ஆனால் சேனா கட்சித் தலைவராக இருந்தும் எதிர்த்தலைவர் பதவியை இழந்தார் பார்த்தீர்களா? இதற்குத்தான் சொல்வது நான் உங்கள் அருகில் இருக்க வேண்டும் என்று. 
இரா.ச:அட, முன்பு தந்தையை அமிர்தான் வழி நடத்தியவர். அதுபோல என்னை நீ வழிப்படுத்துகிறாய். நீ இல்லாமல் நானில்லை... நானில்லாமல் நீயில்லை... ஹ... ஹ... அது சரி மந்திரா! சர்வதேச விசாரணை...?
மந்திரா:அது எப்பவோ முடிந்த காரியம். 
இரா.ச:இது செல்லப்பசுவாமிகள் சொன்ன வாக் கியமாயிற்றே. 
மந்திரா:நாங்கள் இப்படிச் சொல்லுவம் என்பதை அவர் முன்கூட்டியே சொல்லியுள்ளார். அவ்வளவுதான்.
இரா.ச:எதுவாக இருந்தாலும் மந்திரா! சர்வதேச விசாரணை முடிந்து விட்டது என்று நீ கூறுவதை யாரா வது ஆமோதிக்க வேண்டுமல்லவா? அதற்கு யார் பொருத்தம்? 
மந்திரா:எங்கள் அண்ணர் சேனாதி என்று சங்கே முழங்கு. 
(கதவு தட்டப்படுகிறது)
இரா.ச:யாரங்கே?
பாதுகாவலன்:ஐயா!... சேனாதி ஐயா!...
இரா.ச:வரச் சொல்லு..., வரச் சொல்லு.
சேனா:வணக்கம் தலைவரே!
இரா.ச:வணக்கம் சேனா. இந்த சர்வதேச விசா ரணை பற்றி உங்கள் கருத்து.
சேனா:ஐயோ! கடவுளே! யாருக்குச் சர்வதேச விசா ரணை. நீங்கள், நாங்கள் எந்தக் குற்றமும் செய்ய வில்லையே.
இரா.ச:அட! தேர்தல் வெற்றிப் புளகாங்கிதத்தில் உனக்கு எல்லாம் மறந்து போச்சுது போல... 
(இரா.ச சேனாவின் காதில் ஏதோ இரகசியமாக   சொல்லுகிறார்)
மாவை:சத்தியமாய் எனக்கு ஒன்றும் தெரியாது. 
இரா.ச:அதுபோதும்... அதுபோதும்... மந்திரா! சேனாதிக்குச் சொல் அவன் ஆமோதிப்பான். 
(சேனாவின் காதில் மந்திரன் ஏதோ சொல்கிறார்.)
சேனா:என் அருமைத் தமிழ் மக்களே! சர்வதேச விசாரணை எப்பவோ முடிந்து விட்டது. இனி சர்வதேச நீதிமன்றம் விசாரணை நடத்தவேண்டும். 
(தமிழ் மக்கள் தலையைப் பிய்த்துக் கொண்டு கட வுளே ஒன்றும் விளங்கவில்லையே என்கின்றனர்.)
தமிழ் மகன் 1:அப்ப சர்வதேச விசாரணை முடிஞ்சு போச்சுதோ?
தமிழ் மகன் 2:முடிந்தது என்றால் முடிந்தது. முடிய வில்லை என்றால் முடியவில்லை. 
தமிழ் மகன் 1:வடக்கு மாகாண சபையில் சர்வதேச விசாரணையை வலியுறுத்திக் கொண்டு வந்த தீர்மானம்?
தமிழ் மகன்2:ஆடி அடங்கும் வாழ்க்கையடா, ஆறடி நிலமே நமக்குச் சொந்தமடா... 
(கோரஸ்) தகிட... தகிட... தகிட...
வேண்டும்... வேண்டும்... சர்வதேச விசாரணை வேண்டும்... வேண்டும்... வேண்டும்... சர்வதேச விசா ரணை வேண்டும்...  
இரா.ச:மந்திரா என்ன கோசம் அங்கே? 
                                                         (நாளை தொடரும்)   
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila