கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கு அமைய மஹிந்த ராஜபக்ச அமெரிக்காவில் முக ஒப்பனை செய்து கொள்வதற்காக ஒப்பனை கலைஞர்களுக்கு மாத்திரம் 43 லட்சம் ரூபாவுக்கும் மேல் செலவிட்டுள்ளார். கௌரவ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் கலந்து கொள்ளும் அமெரிக்க விஜயம் சம்பந்தமானது என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஜனாதிபதியின் செயலாளர் ஜனாதிபதி செயலகம் கொழும்பு 01 2014 ஆகஸ்ட் 20 இம்மாதம் 29 ஆம் திகதி ஆரம்பமாகும் கௌரவ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அமெரிக்க விஜயத்தின் போது, அவரது தனிப்பட்ட பணியாளர்களுக்கு வழங்கப்படும் கட்டணங்கள் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பாக கீழ்காணும் விடயங்கள் குறித்து கவனம் செலுத்துமாறு கோருகிறேன். கௌரவ ஜனாதிபதியின் பிரதான மருத்துவருக்கு- 20 ஆயிரம் டொலர்கள். உதவி மருத்துவர்கள் குழுவிற்கு- 50 ஆயிரம் டொலர்கள். உணவு மற்றும் பானங்களை வழங்கும் பிரதான சமையல்காரருக்கு – 15 ஆயிரம் டொலர்கள். உதவி சமையல்கார்களுக்காக- 30 ஆயிரம் அமெரிக்க டொலர்கள். கௌரவ ஜனாதிபதியின் பிரதான ஒப்பனை கலைஞர் மற்றும் அவரது உதவியாளர்களுக்கு – 30 ஆயிரம் டொலர்கள். மேலே குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் சம்பந்தமாக நீங்கள் கவனம் செலுத்தி கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு கோருகிறேன். நன்றி சஜின் வாஸ் குணவர்தன (பா.உ) ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் |
அமெரிக்காவில் இரண்டு நாளில் 2 கோடி செலவிட்ட மஹிந்த! - சஜின் வாஸ் குணவர்தனவின் கடிதம் வெளியானது
Related Post:
Add Comments