ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் புதிய நாடாளுமன்றத்தின் அரசியலமைப்புச் சபைக்கான தமது பிரதிநிதிகளை நியமித்துள்ளனர். இதன்படி அமைச்சர்கள் பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் விஜேதாச ராஜபக்ஸ ஆகியோர் அரசியலமைப்புச் சபையின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மூன்று சிவில் சமூகப் பிரதிநிதிகள் அடுத்த சில தினங்களில் நாடாளுமன்றத்தின் அனுமதியுடன் அரசியலமைப்புச் சபைக்கு நியமிக்கப்படுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சபையானது ஏழு நாடாளுமன்ற உறுப்பி்னர்களையும், மூன்று சுயாதீனமான உறுப்பினர்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்புச் சபைக்கான ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பிரதிநிதிகள் நியமிப்பு
Related Post:
Add Comments