இதில், அரசியல் கைதிகளை விடுதலைச் செய்வதற்கான தேசிய அமைப்பு, சிறைச்சாலை கைதிகளின் உரிமையைப் பாதுகாக்கும் குழு, ஐக்கிய சோசலிசக் கட்சி என்பனவும், ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், மதத் தலைவர்கள் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் என பலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் இணைந்து கொண்டனர். இதன்போது, ‘அரசியல் கைதிகளை உடனே விடுதலை செய், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை உடனடியாக நீக்கு, அரசியல் சிறைக் கைதிகள் உண்ணாவிரத்தில் – இதுதான் சகவாழ்வா?, போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர். அத்துடன், நல்லாட்சி அரசங்கம் உடனடியாக விரைந்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் எனவும், அரசியல் கைதிகளின் உயிர்களைப் பாதுகாக்க வேண்டும் எனவும் கோஷமிட்டனர். |
அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி மகசின் சிறைச்சாலைக்கு முன் போராட்டம்!
Add Comments