சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு சிறையில் வாடும் தமிழ் அரசிய் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றது
இதில் கலந்து கொண்டிருந்த சிறைக்கைதிகளின் உறவுகள் தமது நிலமைகளைச்சொல்லி அழுத காட்சி அங்கிருந்த பலரை சோகத்தில் ஆழ்த்தியது. 2007 ம் ஆண்டு எனது கணவர் வீட்டில் இருந்த சமயம் வெள்ளை வானில் வந்த சிலரால் கூட்டிச்செல்லப்பட்டார்.
இன்றிலிருந்து நான் அவரை தேடி அலைந்து வருகின்றேன். எந்தவிதமான பதிலும் இதுவரை எனக்கு கிடைக்கவில்லை.
எமது நிலை தொடர்பில் எவரும் எந்த உறுதிப்பாடும் இதுவரை தெரிவிக்கவில்லை, தயவு செய்து எங்கள் நிலமைகளை மாற்ற உதவி செய்யுங்கள் என்று கண்ணீருடன் தெரிவித்தார்.