"நீங்கள் வெறுமனே நஸ்டஈட்டை வழங்கி விட்டால் நடந்தது எல்லாவற்றையும் மறந்துவிடமுடியாது:"

"நம்பகத்தன்மை மிக்க அரசியல் தீர்வு எங்களிற்கு அவசியம்" தர்மலிங்கம் சித்தார்த்தன்:-
"நீங்கள் வெறுமனே நஸ்டஈட்டை வழங்கி விட்டால் நடந்தது எல்லாவற்றையும் மறந்துவிடமுடியாது:"
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஏற்படுத்தும் இலங்கை அரசாங்கத்தின் அறிவிப்பை நிராகரித்துள்ள சிறுபான்மை தமிழர்கள் சர்வதேச விசாரணையையே வலியுறுத்துவதாக இந்தியாவின் ஆங்கில இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் நேற்றைய அமர்வில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் அதன் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

எனினும் தமிழ்அரசியல் தலைவர்கள் அரசாங்கத்தின் இந்த யோசனைகள் போதுமானவையல்ல, துஸ்பிரயோகம் குறித்த கரிசனைகள் உரிய விதத்தில் விசாரிக்கப்படபோவதில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

வெளிவிவகார அமைச்சர் தங்கள் மேல் நம்பிக்கை வைக்குமாறு. தங்களை நம்புமாறு எங்களை கோருகின்றார், எனினும் கடந்த கால வரலாறு சிறப்பானதாக இல்லை என்பதை அவரே ஏற்றுக்கொள்கிறார் என சுட்டிக்காட்டிய தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் இதன் காரணமாகவே நாங்கள் சர்வதேச விசாரணை அவசியம் என குறிப்பிடுகின்றோம் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை சர்வதேச விசாரணைகளிற்கு பதில் ஆணைக்குழுக்களை அமைப்பதை நிராகரித்துள்ள தமிழ் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தமிழ் சிறுபான்மை சமூகத்தவர் அதிகளவு அதிகாரங்களை கோருகின்றனர் எனவும் குறிப்பிட்டார்.

நீங்கள் வெறுமனே நஸ்டஈட்டை வழங்கி விட்டால் நடந்தது எல்லாவற்றையும் மறந்துவிடமுடியாது, நம்பகத்தன்மை மிக்க அரசியல் தீர்வு எங்களிற்கு அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் என தெரிவித்துள்ளது
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila