இதுவரை காலமும் வாயை மூடிக்கொண்டு மெளனமாக இருந்த டக்ளஸ் தற்போது போர் குற்ற விசாரணை தொடர்பாக எல்லாம் பேச ஆரம்பித்து விட்டார். கோர யுத்தத்தால் உயிரிழப்புகளையும், சொத்தழிவுகளையும் சந்தித்த எமது மக்களுக்கு நீதி விசாரணை நடாத்தப்பட்டு, உண்மைகள் கண்டறியப்படுவதோடு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதுடன், பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கான பரிகாரமும் காணப்பட வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம், பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கோர யுத்தம் நடைபெற்ற வேளை மகிந்த ராஜபக்ஷவின் சேட் பாக்கெட்டில் ஒளிந்திருந்து , திரை மறைவில் பல நாடகங்களை அரங்கேற்றியவர் டக்ளஸ். வன்னியில் கொத்துக் கொத்தாக மக்கள் இறந்தவேளை , யாழில் டான் TV யில் சூப்பர் சிங்கர் புரொகிராம் நடத்தி , நாட்டில் எதுவுமே நடக்காதது போல காட்டிக்கொண்டவர் இவர். தற்போது யுத்தக் குற்ற விசாரணை வேண்டும் என்று அறிக்கை விடுகிறார்.