இலங்கை தொடர்பில் ஐ.நா மனிதவுரிமை ஆணையகம் வெளி யிட்டுள்ள அறிக்கையினை வரவே ற்றுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி,
வெறுமனே அறிக்கை ஊடாக தமிழ் மக்களுடைய நீதி கோரும் தாகத்தினை ஈடுசெய்ய முடியாது.
முழுமையான சர்வதேச பொறு ப்புக் கூறல் பொறிமுறை கொண்ட குற்றவியல் விசாரணையூடாக குற் றவாளிகள் தண்டிக்கப்படுவதே தமி ழ்மக்களின் எதிர்பார்ப்பாகும். இதுவே எமது நிலைப்பாடும் ஆகுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆணையாளர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள கலப்பு நீதிமன்ற கட்டமைப்பு குறித்து முழு மையாக ஆராயப்பட்டு தெளிவுபடுத்தப்பட்ட பின்னரோ அது குறித்த நிலைப்பாட்டை வெளி யிட முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடர்பான ஐ.நா மனிதவு ரிமை ஆணையகம் வெளியிட்டுள்ள அறிக் கை தொடர்பிலான தமது நிலைப்பாடு குறி த்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்தி ப்பு நேற்றைய தினம் 2-ம் குறுக்குத் தெரு வில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.இதன்போதே அவர் மேற்கண் டவாறு தெரிவித்துள்ளார்.
ஐ.நா அறிக்கை மனிதவுரிமை விசார ணையூடாக வந்த அறிக்கையே தவிர குற்ற வியல் விசாரணையின் அடிப்படையில் தயா ரிக்கப்பட்ட அறிக்கையல்ல.
இதனை ஆரம்பத்திலேயே மிகத் தெளி வாக மனிதவுரிமை ஆணையாளர் தெளிவு படுத்தியுள்ளார். இந்த தெளிவுபடுத்தலை நாம் முதற்கட்டமாக வரவேற்கின்றோம்.
ஒரு முழுமையான நடுநிலையான நம்ப கத் தன்மையுடைய சர்வதேச குற்றவியல் விசாரணை நடத்தப்பட்டு அந்த விசாரணை யூடாக குற்றவாளிகள் இனங்காணப்பட்டு, இக்குற்றவாளிகளுக்கு எதிராக நீதிமன்றத் தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு தண் டனை வழங்கப்பட வேண்டுமென்பது தான் தமிழர்களின் நீண்டகால எதிர்பார்ப்பாகும்.
வெறுமனே அறிக்கையூடாக தமிழ் மக் களுடைய நீதி தேடுகின்ற தாகத்தினை ஈடு செய்ய முடியாது என்னும் கருத்தினை வரவே ற்கின்றோம்.
மிக முக்கியமாக மனிதவுரிமை ஆணை யாளர் ஒரு உள்ளக விசாரணையை முழுமை யாக நிராகரித்துள்ளார்.
நாங்கள் ஆரம்ப கட்டம் முதல் இலங்கை அரசின் கீழ் நடைபெறக் கூடிய உள்ளக விசா ரணையை எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளவில்லை.
இதற்கு காரணம் இலங்கை அரசின் காட் டாப்புக்கள் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப் பட்ட அழிவுக்கு பங்காளிகளாக இருந்துள்ள மையே.
இதே கருத்தினடிப்படையில் மனிதவுரிமை ஆணையாளர் ஒரு உள்ளக விசாரணையை நிராகரித்துள்ளார். அதுமட்டுமல்ல; அவர் உள் ளக விசாரணையை நிராகரித்த போது இலங் கையுடைய பாதுகாப்பு கட்டமைப்புக்களும் நீதிக்கான கட்டமைப்புக்களும் 30 வருட போராலும் இனப்பிரச்சினையாலும் நம்பகத் தன்மையும் நடுநிலைத்தன்மையும் முற்று முழுதாக இல்லாமல் போகச் செய்துள்ளது எனவும் மனிதவுரிமை ஆணையர் கூறியுள் ளார்.
உள்ளக விசாரணை நம்பகத்தன்மைய ற்றது எனக் கூறும் மனிதவுரிமை ஆணை யாளர் ஒரு கலப்பு நீதிமன்றம் ஊடாகவும் கல ப்பு சர்வதேச நீதியரசர்கள் ஊடாகவும் விசா ரிக்கப்படக்கூடிய குற்றவியல் பொறிமுறை முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் வெளி ப்படுத்தியுள்ளார்.
எங்களை பொறுத்தவரையில் உள்ளக விசாரணையை நிராகரிக்கும் அதேவேளை இதற்கு பதிலீடாக கலப்பு நீதிமன்ற கட்டமை ப்பை எவ்வாறு பயன்படுத்தலாம் என தெளி வுபடுத்தப்பட வேண்டும் என்றார் அவர். (செ-4)