இராணுவத்தினர் வேண்டுமானால் காடுகளில் இருக்கட்டும் தமது 520 ஏக்கர் காணிகளை தமக்கு கையளிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், தமக்கு ஜனாதிபதியினுடைய எழுத்துமூல உறுதிமொழி கிடைக்கும் வரை இந்தப் போராட்டம் தொடருமென தெரிவித்தனர். பரம்ரை பரம்பரையாக வாழ்ந்து வந்த தமது பூர்வீகக் காணிகள் தற்போது இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் இதற்கு மாற்றீடாக கேப்பாபிலவு மாதிரிக் கிராமமென 20 பேர்ச் காணிகளை வழங்கி தம்மை சிறைக் கைதிகளாக வைத்திருப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர். தற்போது நாட்டில் நிலவும் கடும் வறட்சி காரணமாக கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் குடிநீர் உள்ளிட்ட பிரச்சினை காணப்படுவதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். ஐந்து, பத்து ஏக்கர் காணிகளில் சுதந்திரமாக விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன்பிடி என சொந்தத் தொழில் செய்த தாம், தற்போது தொழிலற்ற நிலையில் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். எனவே தமக்கு எந்தவித காரணமும் கூறாது, நல்லாட்சி அரசாங்கம் தமது காணிகளை உடனடியாக விடுதலை செய்து தமது சொந்த நிலத்தில் குடியேற அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர். இராணுவத்தினர் வேண்டுமானால் காடுகளில் இருக்கட்டும் தமது 520 ஏக்கர் காணிகளை தமக்கு கையளிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
சொந்த இடத்தில் மீளக்குடியமர்த்துமாறு கோரி கேப்பாபிலவு மாதிரிக் கிராம மக்கள் உண்ணாவிரதம்!
Related Post:
Add Comments