இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆளுநரால் வெளியிடப்பட்ட அறிக்கை பக்கச்சார்பற்றது என மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ஜாதிக யஹல உறுமயவின் செயலாளரான அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்த மேற் போந்த கருத்துத் தொடர்பில் தமிழ் மக்கள் கவனம் செலுத்த வேண்டும்.
மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வெளியிட்ட அறிக்கை தொடர்பில் அமைச்சர் சம்பிக்கவின் மற்றைய கருத்துக்களில் முரண்பாடுகள் இருப்பினும் ஆணையாளரின் அறிக்கை பக்கச்சார்பற்றது என்ற கருத்து ஒரு முக்கியமான செய்தியை நமக்குத் தெரிவிக்கின்றது.
அதாவது ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வெளியிட்ட அறிக்கை நியாயமானது என்பதுடன் இலங்கையில் நடந்த போர்க் குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டும் என்ற நிலைப்பாட்டை கொண்டுள்ள சிங்கள மக்களும் தென்பகுதியில் உள்ளனர் என்பதே அந்தச் செய்தியாகும். எனவே இந்த உண்மையை நாம் ஒரு போதும் மறந்துவிடக்கூடாது.
இலங்கையில் நடந்த போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவையயன்ற தமிழ் மக் களின் கோரிக்கையில் இருக்கக்கூடிய நியாயப்பாடுகளை சிங்கள மக்களுக்கு எடுத்துக்கூறுவது தமிழ் அரசியல் தலைமைகளின் தலையாய கடமை.
போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவையயன்று தமிழ் மக்கள் கேட்பது இலங்கைக்கு எதிரானதென்று சிங்கள மக்கள் ஒரு போதும் நினைத்துவிடக்கூடாது.
மாறாக சர்வதேச விசாரணையை நடத்துவதன் மூலம் உண்மைகள் கண்டறியப்படுவதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கவும் வழிவகுக்கும்.
ஆகையால் சர்வதேச விசாரணை என்பது சிங்கள மக்களுக்கோ அல்லது இலங்கைத் திருநாட்டுக்கோ எதிரானது அல்ல என்ற உண்மையை சிங்கள மக்களிடம் எடுத்துரைப்பது அவசியம்.
நாட்டில் இடம்பெற்ற ஆட்சி மாற்றமும் அமைதியான சூழ்நிலையும் சிங்கள மக்களிடம் ஏற்பட்ட மனமாற்றத்தினால் நிகழ்ந்தவையாகும்.
விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த மகிந்த ராஜபக்வை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற முடிவை தனித்து தமிழ் மக்களால் செய்ய முடியாது.
சிங்கள - முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்புட னேயே அந்த மாபெரும் மாற்றம் நடந்தது. ஆக, தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று நினைக்கின்ற சிங்கள மக்கள் இந்த நாட்டில் நிறையவே உள்ளனர்.
எனவே அவர்களுக்கு தமிழர்களின் நிலைப் பாட்டை தெரிவிப்பதும் உண்மை நிலையை அறியப் படுத்துவதும் எங்கள் தலையாய கடமையாகும்.
இல்லையேல் சிங்களப் பேரினவாத அரசியல் வாதிகள் நியாயத்தை உணர்ந்துள்ள சிங்கள மக்களையும் திசைதிருப்பி விடுவர்.
எனவே தமிழர்களின் உரிமை; சர்வதேச விசாரணை; பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைத்தல் என்பது தொடர்பில் சிங்கள மக்களின் ஆதரவையும் பெறுவது மிகவும் முக்கியமானது.
எனினும் எங்களிடம் இதுபற்றிய நினைப்புகள், திட்டமிடல்கள் எதுவும் கிடையாது. நாங்கள் முக் கியமான அரசியல் பதவிகளில் இடம்பிடித்தாலும் எங்கள் சுயலாபத்துக்காக எங்களை நாங்களே அடித்து வீழ்த்துகின்ற அநாகரிகங்களைத்தான் செய்வோம் என்பதால், இத்தகைய சிறுமைத்தனங் களை விடுத்து, தமிழ் மக்களின் விடிவுக்காக ஆரோக்கியமான பிரசாரங்களை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் முன்னெடுப்பது இன்றியமை யாததாகும்.