முழுமையான சர்வதேச குற்றவியல் நீதிச்செயன்முறை ஒன்றின் ஊடாகவே, உண்மையான பொறுப்புக்கூறலும் நீதியும் நிலைநாட்டப்படும் என்பது இலங்கையின் இன முரண்பாட்டு யுத்தத்தின் பாதிப்புக்குள்ளானோர்களின் பெரும்பான்மையினராகிய தமிழர்களின் தீர்க்கமான நம்பிக்கை என வலியுறுத்தி ஐ.நா மனிதவுரிமை ஆணையாளருக்கும் ஐ.நா உறுப்புநாடுகள் 47 க்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வறிக்கையினை வடக்கு கிழக்கினை சேர்ந்த அரசியல் கட்சிகளும் நாற்பது சிவில் சமூக அமைப்புக்களும் இணைந்து அனுப்பி வைத்துள்ளன. ‘இலங்கையில் நல்லிணக்கத்தையும் பொறுப்புக்கூறலையும் மனித உரிமைகளையும் மேம்படுத்தல்’ எனும் தலைப்பில் இன்றைய தினம் [செப்ரெம்பர் 30ம் திகதி] ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கும் உத்தேச பிரேரணை தொர்பாக இக் கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
1. முழுமையான சர்வதேச குற்றவியல் நீதிச்செயன்முறை ஒன்றின் ஊடாகவே, உண்மையான பொறுப்புக்கூறலும் நீதியும் நிலைநாட்டப்படும் என்பது இலங்கையின் இனமுரண்பாட்டு யுத்தத்தின் பாதிப்புக்குள்ளானோர்களின் பெரும்பான்மையினராகிய தமிழர்களின் தீர்க்கமான நம்பிக்கை என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூறுகின்றோம்,.
2. இருந்த போதிலும், ஐ. நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் விசாரணை அறிக்கையில் பரிந்துரைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் ஐ.நா வின் ஈடுபாட்டுடன் அமைக்கப்படும், நம்பகத்தன்மையான கலப்பு நீதிமன்றம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டு, அப் பொறிமுறையின் சர்வதேச அங்கத்தின்; தலைமையினால் நிர்வகிக்கப்படும் ஒரு நீதி விசாரணைப் பொறிமுறையினூடாக நீதியையும் உண்மையான பொறுப்புக்கூறலையும் அடைவதற்கான முயற்சிகளையும் நாங்கள் சாதகமான முறையில் கருத்தில் கொள்ளத் தயாராகவிருந்தோம்.
3. எனினும் அவ்விதமான நம்பத்தகுந்த கலப்பு நீதிமன்ற செயன்முறை ஒன்றை ஸ்தாபிப்பதற்குரிய ஏற்பாடுகள், சமர்ப்பிக்கப்படவுள்ள உத்தேச பிரேரணையின் செயற்பாட்டு பந்தியின் 4ம் 6ம் பந்திகளில்; போதுமான அளவு விதந்துரைக்கப்படவில்லை என கவலை கொள்கின்றோம். அப்பந்திகளின் வெளிப்பாடானது, உள்ளகப்பொறிமுறை நம்பகத்தன்மையானது எனும் தோற்றப்பட்டைக் உருவாக்கும் நோக்கில்; மட்டும், பொதுநலவாய, வெளிநாட்டு நீதிபதிகள், சட்டத்தரணிகள், விசாரணையாளர்கள் மற்றும் வழக்குத் தொடுநர்களை நியமிக்க கோருகிறது என நாம் கருதுகிறோம். இலங்கையின் உள்ளகப்பொறிமுறையானது கட்டமைக்கப்பட்ட மிகவும் அடிப்படையான குறைபாடுகளை உடையது என்பதை மனித உரிமை ஆணையாளரது அறிக்கை உரிய காரணங்களுடன் தெளிவாக விளக்கியிருக்கிறது.
இலங்கை அரசின் கட்டுப்பாட்டுக்குள்; இலங்கை அரசாங்கமே வெளிநாட்டு நீதிபதிகளினை நியமிப்பதானது, எந்தவகையிலும், உள்ளகவிசாரணையின் கட்டமைப்புசார் குறைபாடுகளை நிவர்த்தி செய்யாது. இலங்கை அரச கட்டமைப்பின் நிர்வாகத்தின் கீழ் அவர்களால் கட்டுப்படுத்தப்படும் எந்தவொரு பொறிமுறையும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் நம்பிக்கையை பெற்றுக்கொள்ளாது.
4. சமர்ப்பிக்கப்படவிருக்கும் பிரேரணையின் ஆரம்ப வரைபில் குறிப்பிடப்பட்டிருந்த வடக்கு கிழக்கில் இராணுவமயமாக்கலை நீக்குவது குறித்த பரிந்துரை மற்றும் மனித உரிமை ஆணையாளரது பங்களிப்பு சம்பந்தமான பந்திகள், தற்போதய திருத்தப்பட்ட உத்தேச வரைபில் நீக்கப்பட்டுள்ளமை குறித்து, நாங்கள் ஆழ்ந்த கவலை அடைகிறோம். அத்தோடு, தற்போதய வரைபின் செயற்பாட்டுப்பந்தி 3ல் குறிப்பிடப்பட்டிருக்கும், இலங்கை தழுவிய பாதிக்கப்பட்ட மக்களுடனான கலந்துரையாடல் என்பது, சித்திரவதைகளுக்கு அஞ்சி வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள பாதிக்கப்பட்ட மக்களின் கருத்தைப் பெற்றுக்கொள்ளளலை புறமொதுக்குகிறது. புலம்பெயர்ந்த மக்களின் வாக்குமூலங்களே, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலக விசாரணையின் முக்கிய அம்சமாக விளங்கியிருந்தது. இலங்கையுடன் இணைந்து ஒரு தீர்மானத்தை சமர்ப்பிக்கும் நோக்கத்திற்காக, உத்தேச வரைபில் இருந்த, சில முக்கியமான பகுதிகள் நீக்கப்பட்டிருப்பது குறித்து நாங்கள் ஆழ்ந்த மனவருத்தம் அடைகிறோம்.
5. ஆகையால் மேற்சொன்ன விடயங்களைக் கருத்தில் கொண்டு இலங்கையில் உண்மையான நீதியும் பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்தும் விதத்தில், சமர்ப்பிக்கப்படும் பிரேரணையில் திருத்தங்களை செய்யுமாறு வேண்டுகிறோம். என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வறிக்கையினை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட், ரெலோ ஆகிய நான்கு கட்சிகளும் சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டு குழு, தமிழ் சிவில் சமூக அமையம் உட்பட நாற்பது சிவில் அமைப்புக்களுமே மேற்படி அறிக்கையை ஐ.நா ஆணையாளருக்கு அனுப்பி வைத்துள்ளன.