
கடந்த மாகாணசபை தேர்தலின் பின்னர் தேர்தலில் முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன் அவர்கள் 130,000 வாக்குகளையும் அனந்தி சசிதரன் அவர்கள் 87,000 வாக்குகளையும் யாழ்மாவட்டத்தில் மாத்திரம் பெற்றிருந்ததோடு நடைபெற்று முடிவடைந்த பாராளுமன்ற தேர்தலில் யாழ்,கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகூடிய வாக்கான 72000 இனை பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்களும் பெற்றுருந்தனர்.
இந்த மூவருமே த.தே.கூட்டமைப்பின் எந்த கட்சியையும் சாராது சாதாரண குடிமக்களாக வாழ்ந்து த.தே.கூட்டமைப்பு அரசியலுக்குழ் வந்தபோது அதனை சாதகமாக பயன்படுத்திய தமிழரசுக் கட்சி தங்களுடைய ரிமோட் கொன்ரொல் கட்டுப்பாட்டுக்கு உட்படாமலும் தேர்தலுக்கு முன்னர் மக்களுக்கு வழங்கிய ஆணைப்படியும் செயற்படும் நபர்களை சாதுரியமாக அரங்கிலிருந்து அகற்றுவதன் மூலம் தமது இணக்க அரசியல் நகர்வுகளை நடாத்த திட்டமிடுகின்றது.
அந்த வகையில் தேர்தலுக்கு முன்னரே ஆரம்பித்த அனந்தி சசிதரன் மற்றும் முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரனுக்கு எதிரான பிரச்சாரங்கள் தற்போது பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மீது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனை சம்பந்தன் சுமந்திரனின் மறுபிரதியான ”கனடா நக்கீரன்” மூலம் அதன் காழ்ப்புணர்வு பிரச்சாரத்தினை கடந்த இரு தினங்களாக மேற்கொண்டு இன்றைய தினம் சிறீதரன் மீது சேறுபூசும் பரப்புரை த.தே.கூட்டமைப்பின் வெளிநாட்டு அத்திவாரமான கனடா கிளை மூலம் தங்கவேல் அவர்களால் திட்டமிட்டு அரங்கேற்றப்படுகின்றது.
இதனை நாம் தொடர்ந்தும் அனுமதிப்போமாக இருந்தால் விடுதலைப்பலிகள் காலத்தில் 2004 இல் இடம்பெற்ற தேர்தலில் 125,000 விருப்பு வாக்கினைப்பெற்ற கஜேந்திரன் அணி எவ்வாறு சொதுரியமாக கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டதோ அதேபோல தேசியத்திற்காக குரல்கொடுத்துவரும் முதலமைச்சர், அனந்தி அந்த வரிசையில் சிறீதரன்.
இவ்வாறு உறுதியாக குரல் கொடுப்பவர்கள் தங்கள் இணக்க அரசியலுக்கும் தமது சாணக்கிய செயல்முறைகளுக்கும் ஒத்துவராத நிலை நீடிப்பதால் இவர்களை அரங்கிலிருந்து அகற்றி தமக்கு ஒத்துழைப்பை வழங்குபவர்களை தொடர்ந்தும் வைத்திருந்தாலே தமது அரசியல் வாழ்வை தக்கவைக்க முடியும் என்ற நிலை தமிழரசு கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.
அவர்களால் திட்டமிட்டு பரப்பப்படும் பதிவுகளில் சில உங்கள் பார்வைக்காக உங்கள் கருத்துக்கள் மற்றும் எதிர்ப்பினை வெளியிடுவதன் மூலம் வெளிநாட்டிலிருந்து எம்மை ரிமோட் கொன்ரோளால் இயக்க முடியும் என கருதும் கனடா நக்கீரனுக்கும் உங்களுக்கான பதிலாக இருக்கட்டும்.
பதிவுகளை பார்வையிட
பதிவுகளை பார்வையிட