பழைய பல்லவி புளிக்கிறது:மனோ!

அரசியல் கைதிகள் இல்லை' என்ற பழைய பல்லவியை பாடாமல் அவர்களை உடனடியாக விடுவிக்குமாறு மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சிறையில் அரசியல் கைதிகள் இல்லை" என்று அமைச்சர் ஹர்சன நாணயக்கார கூறுகிறார்.

முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்காராவின் தம்பி மகனான அவர். இன்றைய ஜே.வி.பி அரசில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்.

அன்று அரசுக்கு எதிராக ஆயுதம் தூக்கி போராடிய தமது கட்சி அங்கத்தவர்களை அரசியல் போராளிகள் என்று கூறிய ஜேவிபி, இன்று தமிழ் அரசியல் போராளி கைதிகளை அரசியல் கைதிகள் என அங்கீகரிக்க மறுக்கிறது.

அது எங்களுக்கு பழகி போன ஒரு பழைய பல்லவி. இன்று புது புரட்சி மாற்றம் செய்ய போகிறோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த புரட்சி அரசாங்கமும் அதே அரைத்த மாவையே அரைக்கிறது.

அப்படியான பல பல்லவிகளை கேட்டு, முரண்பட்டு, ஜனநாயக ரீதியாக போராடிய வரலாற்றை கொண்ட எமக்கு, இது பழகி போன ஒரு மேலாதிக்க அரசியல் கருத்து. “அரசியல் கைதிகள் இல்லை” என்ற பழைய பல்லவியை பாடாமல் தமிழ் அரசியல் கைதிகளை உடனேயே விடுவியுங்கள்.

சிறையில் அரசியல் கைதிகள் இல்லை என்ற கருத்தைத்தான் எப்போதும் எல்லா சிங்கள பெரும்பான்மை அரசாங்கங்களிலும், எல்லா அமைச்சர்களும் சொன்னார்கள்.

அரசாங்க தரப்பு அப்படிதான் சொல்வார்கள். அவர்களுக்கு "பயங்கரவாதி". மக்களுக்கு "போராளி" , பலஸ்தீனம் முதல்  இலங்கை வரை, உலகம் முழுக்க போராட்டங்கள் நிகழ்ந்த நாடுகளில் இப்படி தான்.

ஆனால், அன்று ஆயுத போராட்டம் செய்த ஜேவிபியே, இன்று இப்படி கூறுகிறது. “அரசியல் கைதிகள் இல்லை” என்று கூறி, அவர்களுக்கு பயங்கரவாதிகள் பட்டம் சூட்ட முனைகிறது.

1971ல், தமிழ் இளைஞர் ஆயுதம் தூக்க முன்னமே, ஆயுதம் தூக்கிய தமது அங்கத்தவர்களை அரசியல் போராளிகளாக அடையாளம் காணும் ஜேவிபி, கைதாகி சிறையில் உள்ள தமிழ் இளைஞர்களை, அரசியல் கைதிகள் இல்லை என்று கூறுகிறது.இந்த இரட்டை வேடம், இவர்களுக்கு இன்று வாக்களித்த செந்தமிழர்களுக்கு தான் வெளிச்சம் எனவும் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila