வீடுகளில் டெங்கு நுளம்பு பெருகும் அபாயம் குறித்து பரிசோதனை மேற்கொள் ளும் சுகாதார பரிசோதகர்களுடன் இரா ணுவத்தினர் செல்வது தொடர்பில் பொது மக்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.
எனினும் சுகாதார பரிசோ தகர்களுடன் இராணுவத்தினர் செல்வதற்கு தாம் அனுமதிய ளிக்கவில்லை என யாழ். மாந கர சபையின் ஆணையாளர் வாகீசன் தெரிவித்தார்.
அண்மைய நாட்களாக யாழ். மாநகர சபைக்குட்பட்ட இடங்களில் டெங்கு நுளம்பு அதிகரிப்பு குறித்து சுகாதார பரிசோதகர்களினால் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின் றது.வீடுகள், கடைகள் மற் றும் காணிகள் ஆகியவற்று க்கு நேரில் செல்கின்ற இவர் கள் அங்கு டெங்கு நுளம்பு பரவும் இடங்கள் குறித்து பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.இவ்வாறு பரிசோ தனைகளையடுத்து அங்கு டெங்கு பரவும் இடம் இனங்கா ணப்பட்டால் அவர்கள் மீதும் வழக்குத் தொடரப்பட்டும் வருகின்றது.
இவ்வாறு மேற்கொள்ளப் படும் பரிசோதனைகளில் பொலி ஸார் மற்றும் சுகாதார பிரிவின ரோடும் இராணுவத்தினரும் இணைந்து செல்கின்றனர்.
சிவில் நடவடிக்கைகளில் இராணுவ பிரசன்னம் குறி த்து பொதுமக்கள் மத்தியில் காணப்படும் விசனம் குறித்து யாழ்.மாநகர சபையின் ஆணை யாளரிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள் குறித்து யாழ்.மாந கர சபையின் சுகாதார பிரிவி னரால் யாழ்.மாநகரசபைக்கு ட்பட்ட இடங்களில் பரிசோ தனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆறுகால்மடம், நல்லூர், வண்ணார்பண்ணை, யாழ். நகர் புறநகர்ப்பகுதி எனப் பல இடங்களில் பரிசோ தனை மேற்கொள்ளப்பட்டு டெங்கு நுளம்பு பரவும் வகை யில் காணியை வைத்திருந் தவர்கள் மீது வழக்கும் தொட ரப்பட்டு வருகின்றது.
எனினும் இந்த நடவடிக் கைகளில் இராணுவத்தினர் ஈடுபடுவது குறித்து எமக்கு எது வும் அறிவிக்கப்படவில்லை அவர்களது வரவேட்டிலும் இரா ணுவத்தினர் செல்வது குறி த்து தெரியப்படுத்தவில்லை இது குறித்து உரிய அதிகாரி களுடன் பேசி தெளிவுபடுத்து வதாக ஆணையாளர் மேலும் தெரிவித்தார். (இ-4)