அமெரிக்க பிரேரணையின் சில பலவீனங்கள் முழுமையான செயற்பாடுகளையும் தோற்கடித்து விடும்! - விக்னேஸ்வரன்


ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்படவிருக்கும் இலங்கை தொடர்பான பிரேரணையில் உள்ள சில பலவீனங்கள் முழுமையான செயற்பாடுகளையும் தோல்வியடையச் செய்து விடும் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்படவிருக்கும் இலங்கை தொடர்பான பிரேரணையில் உள்ள சில பலவீனங்கள் முழுமையான செயற்பாடுகளையும் தோல்வியடையச் செய்து விடும் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
           
இந்தப் பிரேரணை உண்மையைக் கண்டறிவதற்கும், பாதிக்கப்பட்டவர்க ளுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற் கும், நீண்டகாலமாக பிளவுபட்டுப் போயிருக்கும் மக்களுக்கு அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக்கொடுப்பதற்கும் நல்லதொரு ஆரம்பமாக அமையும். வடமாகாண முதலமைச்சர் என்பதால் மட்டுமல்ல, உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியென்ற ரீதியில், இந்தப் பிரேரணையில் உள்ள சில பலவீனமான விடயங்கள் முழுமையான செயற்பாடு களையும் தோல்வியடையச் செய்துவிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அங்கம்வகிக்கும் உறுப்பு நாடுகளுக்கு, இலங்கை தொடர்பான பிரேரணை பற்றி அனுப்பிவைத்திருக் கும் கடிதத்திலேயே சீ.வி.விக்னேஸ்வரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பல தசாப்தங்களாக இடம்பெற்ற பிழையான வழிநடத்தல்கள் மற்றும் மீறப்பட்ட உறுதிமொழிகளால் ஏற்பட்ட பரந்த சந்தேகம் காணப்படும் நிலையில் உள்ளக விசாரணைப் பொறிமுறை தீர்வாக அமையாது என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத் தின் விசாரணை அறிக்கையில் தெளிவா கக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் பரிந்துரைக்கு அமைய விசேட கலப்பு நீதிமன்றத்தை உறுதிப்படுத்துவதற்குப் பதிலாக, பொதுநலவாய நீதிபதிகள், சட் டத்தரணிகள் மற்றும் விசாரணையாளர் களை உள்ளடக்கிய இலங்கையின் விசாரணைப் பொறிமுறையொன்றையே இலங்கை தொடர்பான பிரேரணை வலியுறுத்துகிறது. இதில் முதலாவது கவனிக்கப்பட வேண்டிய விடயம், எமது நாட்டில் சர்வதேச சட்டத்தில் உள்ள விடயங்க ளைக் கொண்டுவருவதாயின் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும்.
இரண்டாவதாகக் கவனிக்க வேண்டிய விடயம் என்னவெனில், உள்ளூர் விசார ணையாளர்கள் மத்தியில் விசாரணைக் கான பொறுப்பு செல்லுமாயின் பாதிக் கப்பட்டவர்களுக்கு அது நீதியை வழங்காது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பணியாற்றும் தகுதியுடைய சர்வதேச நீதிபதியொருவரை விசாரணைக்கு நிய மித்தாலும் சட்டமா அதிபர் திணைக்கள த்தின் பிரதிநிதியொருவரும் விசாரணை களில் கலந்துகொள்வார்.
மூன்றாவது விடயம், சர்வதேச நீதிபதிகளின் தீர்மான ங்கள் உள்ளூர் நீதிபதிகளால் தட்டிக்கழிக்கப் படுவது மற்றும் குறைத்துமதிப்பிடப்படலாம். விசாரணைப் பொறிமுறையானது பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையை யும், ஆதரவையும் வெல்வதாக இருக்க வேண்டுமே தவிர, அவர்களை வலியுறுத் துவதாக இருக்கக் கூடாது. அவ்வாறான தொரு விசாரணைப் பொறிமுறையை குறித்த பிரேரணை முன்மொழியத் தவறி யிருப்பது பெரும்கவலையளிப்பதாகவும் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரேரணையில் உள்ள பல்வேறு பரிந் துரைகளை அமுல்படுத்துவது அரசாங்க த்தின் மீதான நல்லெண்ணத்தின் அடிப் படையிலேயே தங்கியுள்ளது. எனினும் தற்பொழுது இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் மற்றும் வடக்கு, கிழக்கில் இராணுவ பிரசன்னங்களைக் குறைப்பது தொடர்பான பரிந்துரைகளை குறித்த பிரேரணையிலிருந்து நீக்குவதற்கு அரசாங்கம் எடுத்திருக்கும் முயற்சிகள் அரசு மீதான நல்லெண்ணத்தை ஏற்படுத்த வில்லையென்றும் விக்னேஸ்வரன் குறிப் பிட்டுள்ளார்.
இந்தப் பிரேரணையானது ஒரு படி முன்னோக்கிச் செல்லும் செயற்பாடாக இருந்தாலும், கடுமையான கண்காணிப்பு மற்றும் சர்வதேச சமூகத்தின் செயற்றிறன் மிக்க பங்களிப்பின் மூலமே சகல செயற்பாட்டையும் வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila