இலங்கையில் உண்மையான அமைதியையும் நீதியையும் பெறுவதற்கு, “எவரும் தம் சொந்த காரணத்திற்கு நீதிபதியாக இருக்கக் கூடாது” என்னும் இயற்கை நீதிக் கோட்பாட்டை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
இலங்கைக்குள் செல்லாமலே தயாரிக்கப்பட்ட இந்த OISL அறிக்கை, இயல்பாக இனப்படுகொலை எண்ணுமளவிற்கு தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட சில முக்கிய வன்முறைகளை வெளிக்கொண்டு வந்திருக்க வேண்டும். இலங்கை ஓர் அரசாக தோல்வியுற்றது என்றும் நீதித்துறை உட்பட அதன் அரசியலமைப்பு நிறுவனங்கள் தோல்வியுற்றது என்றும் இந்த அறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளதை நாம் தீவிரமாக எடுத்துக்கொள்வதோடு மேற்கொண்டு தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட குற்றத்தை சுதந்திரமாக விசாரிக்கும் சர்வதேச அளவிலான ஒரு குற்ற விசாரணையை துவங்க வேண்டும்.
இலங்கையில் 1963 முதல் 2013 வரை கிட்டத்தட்ட பதினெட்டு விசாரணை ஆணையங்கள் அமைக்கப்பட்ட போதும் ஒன்று கூட நீதியை வழங்க முடியவில்லை. மேலும் இந்த ஆணையங்களில் பெரும்பான்மையானவை தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட குற்றங்களுக்கானவை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இலங்கை நீண்ட காலம் “இறையான்மை” என்பதை சர்வதேச “தலையீட்டை” தடுக்கும் கவசமாக பயன்படுத்துவதோடு தமிழர்கள் மீதான இனப்படுகொலை திட்டங்களை செயல்படுத்தியும் வருகின்றது.
தமிழீழ விடுதலைப்புலிகளின் எழுச்சிக்கும் முன்னரே கூட, தமிழர்கள் மீது இலங்கை பலமுறை இனப்படுகொலையை நிகழ்த்தியுள்ளது.
1948-லிருந்து அடுத்தடுத்த அரசுகள், அவை எப்படிப்பட்ட முற்போக்கானவையாக இருந்தாலும், தமிழர்களுக்கு எதிரான நிலைபாட்டையே எடுத்து வந்துள்ளன.
தற்போதைய வரைவு தமிழர்களின் குரல் இல்லாமல் குறையுடன் உள்ளது. 2009 போரின் இறுதிக்கட்டங்களில் 40,000க்கும் மேற்பட்டோர் காணாமல் போன போது இந்த மைத்திரி பால சிறிசேன தான் அரசின் தலைமையில் இருந்தார். 60 ஆண்டு கால போராட்டத்தின் மூலம் பெறப்பட்ட தமிழர்களின் இறையாண்மையை முற்றிலும் அகற்றுவதற்கு இந்த இனப்படுகொலைப் போர் ஒரு கருவியாக பயன்படுத்தப்பட்டது.
ஒவ்வொரு 6 பேருக்கும் ஒருவர் என்ற விகிதத்தில் தமிழர்களின் தாயகம் இலங்கையின் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்த இலங்கை இராணுவம் 99% சிங்களவர்களை கொண்டது. இந்த இராணுவமயமாக்கல் தமிழர்களை பெரும்பான்மையாக கொண்ட பாதிக்கப்பட்டவர்களையோ, சாட்சிகளையோ பாதுகாக்க போவதில்லை.
இலங்கையின் அரசியலமைப்பை தமிழர்கள் ஏற்றுக்கொண்டதே இல்லை என்பதை இந்த சபைக்கு நினைவூட்ட நான் கடமைப்பட்டுள்ளேன்.
இலங்கையின் அரசியலமைப்பை தமிழர்கள் ஏற்றுக்கொண்டதே இல்லை என்பதை இந்த சபைக்கு நினைவூட்ட நான் கடமைப்பட்டுள்ளேன்.
பெரும் சவக்குழிகளுக்கு பெயர்பெற்ற ஆட்சியை வழங்கிய இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்காவை தற்போதைய ஆட்சியின் நல்லிணக்க முயற்சிகளுக்கு தலைமையாக நியமித்தது தமிழர்களுக்கு நீதியை வழங்காது. சந்திரிகா குமாரதுங்காவின் சவக்குழிகள் குறித்து ஏப்ரல் 29, 2009இல் செய்தி வெளியிட்ட BBC உட்பட சர்வதேச பத்திரிகைகளில் பரவலாக பேசப்பட்டது.
மேற்கூறப்பட்டவை போன்ற நிகழ்வுகள் ஏன் இலங்கை தன்னைத்தானே விசாரித்துக்கொள்ளும் திறனற்றவை என்பதை சுருக்கமாக விளக்கும் சில எடுத்துக்காட்டுகள்.
பிற இடங்களைப் போல பாதிக்கப்பட்டோர் தங்கள் சொந்த இறையாண்மையின் பாதுகாப்பில் இருந்துகொண்டு தம்மீது நிகழ்த்தப்பட்ட குற்றங்கள் மீது சாட்சியமளிக்க விட வேண்டும்.
சிரியாவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்பும் பொதுச்செயலாளரின் பரிந்துரையை நாங்கள் வரவேற்கின்றோம். தமிழர்களின் உயிரும் அப்பாவி சிரியர்களுக்கு ஒப்பான மதிப்புடையது தான். அதே போன்று ஐ.நா. சாசனம் பிரிவு 22-ன் கீழ் தமிழினப்படுகொலை மற்றும் பிற குற்றங்களை விசாரிக்கும் “துணைமை அமைப்பாக” இலங்கைக்கான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (ICTSL) ஒன்றும் இருக்கட்டும்.
எவரும் தம் சொந்த காரணத்திற்கு நீதிபதியாக இருக்கக் கூடாது.