அவர் மேலும் கூறுகையில்,
எனது தம்பியான முத்துசாமி ரவிந்திரன் என்பவர் கடந்த 1990ம் ஆண்டு கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெயர்ந்து இருந்த எங்களை பார்க்க வந்தார்.
வந்தவழியில் தாக்குதல் ஒன்று நடைபெற்றதை தொடர்ந்து வீதியில் நின்ற எனது தம்பியுடன் 18 பேரைப்பிடித்த இராணுவ சீருடை தரித்த சிலர் பஸ்ஸில் ஏற்றி செங்கலடி இராணுவ முகாமிற்கு கொண்டுசென்றனர்.
பின்னால் கத்திக்கொண்டு ஓடிய என்னையும் எனது அம்மாவையும் நோக்கி துப்பாக்கியால் சுட்டு ஓடச்சொல்லி சிங்களத்தினால் ஏசி துரத்திவிட்டனர். அதற்கு பின்னர் நாங்கள் பல இடங்களுக்கு அறிவித்தும் இன்றுவரை அவர் இருக்கின்றரா இல்லையா என்று இன்னும் தெரியவில்லை.
அவரைத் தேடி தேடி எனது அம்மாவிற்கு பிரசர் கூடி கையும் காலும் இழுத்துவிட்டது. எட்டுவருடமாக படுத்த படுக்கையில் இருக்கின்றார். எனவே அவர் இருக்கின்றாரா இல்லையா என்பதை தெரிவியுங்கள் என கண்ணீர்மல்க தெரிவித்தார்.
மகிந்த ராஜபக்சவின் அம்பாறை மாவட்ட இணைப்பாளராக இருந்த இனியபாரதி கைது செய்து விசாரியுங்கள் அவரே எனது மகனைக் கடத்திச் சென்றவர். அவரை விசாரித்தால் எனது மகன் எங்கே இருக்கின்றான் என்று தெரியுமென ஐ.நா காணாமல் போனோர் விசாரணை குழுவைச் சந்தித்த தாயார் இருவர் கதறியழுதவாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்று மட்டக்களப்பிற்கு விஜயம் செய்துள்ள ஐநா காணாமல் போனோர் விசாரணை ஆணைக்குழு முன் ஆட்சிம் அளித்ததன் பின்னர் அவர்கள் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தனர்.
அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த இராசப்பிள்ளை மரகதமனி என்பவர் கூறும்போது,
இன்னும் எனது மகன் வீட்டுக்கு வரவில்லை. எனவே இனியபாரதியை கைது செய்து விசாரியுங்கள். அவரே எனது மகனைக் கடத்திச் சென்றவர். அவரை விசாரித்தால் எனது மகன் எங்கே இருக்கின்றான் என்று தெரியுமென கூறினார்.
இதேவேளை, அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த மற்றுமொரு தாயார் கருத்து தெரிவிக்கையில்,
இனியபாரதியின் தலைமையில் செயற்பட்ட பத்மநாதன் தயாபரன் என்பவரே எனது மகனை கொண்டு சென்றார். பின்னர் எனது மகன் எங்கே என்று கேட்டபோது எனது மகனை ஆமியிடம் கொடுத்துவிட்டதாக சொன்னார் என கண்ணீர்மல்க தெரிவித்தார்.