மாதிரிக் கிராமத்தை கேப்பாப்பிலவு கிராமம் என பெயர் மாற்றி மக்களுக்கு சில வீடுகளை இராணுவத்தினர் வழங்கவுள்ளனர்.
இச் செயற்பாடு உகந்த செயல் இல்லை.மக்களை ஏமாற்றும் செயலாக உள்ளது.
கேப்பாப்பிலவு கிராமத்தில் மக்கள் குடியேற வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு. இதன் காரணமாகவே மக்கள் மாதிரி கிராமத்தை ஏற்றுக்கொண்டனர்.
இந்த நிலையில் மாதிரிக் கிராமத்தை கேப்பாப்பிலவு என பெயர் மாற்றி மக்கள் குடியேறும் காணிகளை இராணுவம் ஒட்டு மொத்தமாக கைப்பற்றும் நடவடிக்கையாகவே அமைந்துள்ளது.
இச்சம்பவத்தை வண்மையாக கண்டிப்பதோடு, இவ்விடயம் தொடர்பாக உடனடியாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரவுள்ளேன்.
எனவே கேப்பாப்பிலவு கிராம மக்களை அவர்களின் சொந்தக்கிராமமான கேப்பாப்பிலவு கிராமத்திலே குடியமர்த்த வேண்டும்.என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவித்தார்.