இன்று நத்தார் பண்டிகை. இயேசு பாலகனின் பிறப்புநாள்.
மானிடத்தின் பாவத்தைச் சுமக்க வந்த இயேசு பாலகனின் பிறப்பு என்பது ஒளிமய மானது. பாவம் எனும் இருள் அகற்றுவது.
எனினும் இன்றைய உலக மானிடம் பாவச் செயல்களால் இருள்மயப்பட்டுள்ளது.
இறை வழிபாடு கூட ஒரு சடங்காக மாறி விட்ட நிலையில் பணமும் செல்வாக்கும் ஊழ லும் தலைவிரித்தாடி ஏழை மக்களைத் தொடர் ந்தும் ஏழைகளாக ஆக்கி வருகிறது.
உன்னைப் போல உன் அயலவனையும் நேசி என்றார் இயேசு பிரான். உன்னைப் போல் பிறரையும் நேசி என்ற கருத்துக்குள் எல்லாம் அடங்கும்.
பிற மதங்கள், பிறமொழியினர், பிறதேசத்த வர் என அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு வாசகமே உன்னைப் போல பிறரையும் நேசி என்ற பிதாமகனின் போதனையாகும்.
இருந்தும் இயேசு பிரானின் போதனை களைப் பின்பற்றுவதாகக் கூறும் சில சமயப் பிரிவுகள் மதமாற்றம் என்ற முயற்சியில் கடுமையாக ஈடுபடுகின்றன.
இத்தகைய அமைப்புகளால் புனிதமான கத்தோலிக்கம் கூட தள்ளாடும் அளவில் இன்றைய நிலைமை உள்ளது.
தத்தம் சமயப் பிரிவு தவிர்ந்த ஏனைய சமயம் சார்ந்த தெய்வங்களைச் சாத்தான்கள் என்று கூறுகின்ற அளவில் கிறிஸ்தவத்தின் சில பிரிவுகள் செயற்படுவது வேதனைக்குரி யது.
இயேசு பிரானின் போதனைகளையும் புனித விவிலியத்தை கற்றறிந்த எவரும் ஏனைய சமயத்தின் கடவுள்களை கொச்சைப் படுத்தவும் இழிவுபடுத்தவும் விரும்பமாட்டார் கள்.
இலங்கையைப் பொறுத்தவரை குடியேற்ற வாதத்துடன் கிறிஸ்தவத்தின் வருகை ஆரம்ப மாகின்றது.
மதம் பரப்பும் நோக்குடன் அமெரிக்க மிச னறிமார் யாழ்ப்பாணத்துக்கு வருகின்றனர். மதம் பரப்பும் எண்ணத்தோடு அவர்கள் இங்கு வருகை தந்தாலும் யாழ்ப்பாணத்து சூழ்நிலை களைக் கற்றறிந்து அதற்கேற்றாற்போல் அவர்கள் செயற்பட்டனர். கல்வியைப் புகட்டு வது அவசியம் என உணர்ந்தனர்.
மதம் பரப்புவதற்கு என்று வந்த மிசனறி மார்களே யாழ்ப்பாணத்து சூழ்நிலைக்கேற்ப தங்களை மாற்றிக் கொண்டுள்ளபோது, யாழ்ப் பாணத்தைச் சேர்ந்த சிலர் குழுவாக இயங்கி பிற சமயங்களையும் அச்சமயம் சார்ந்த புத்தி ஜீவிகளையும் படுமோசமாக விமர்சிக்கின்ற னர். இத்தகையவர்களை இயேசு பிரான் நிச் சயம் மன்னிக்க மாட்டார்.
மற்றவர்களின் பாவத்தைச் சுமந்த பிதா மகனின் போதனைகளை உண்மையாகப் பின் பற்றுவதே உண்மையான கிறிஸ்தவத்தின் உயர் பண்பாகும்.
இதனை விடுத்து வீடு வீடாகச் சென்று சம் பளத்துக்காக மதம் மாற்றுவோர் எந்த நேரத் திலும் தங்களை மாற்றிக் கொள்வர் என்பது தெரிந்த விடயமே.
எனவே இயேசு பாலகனின் பிறப்பு நாளான இன்றைய நத்தார் நன்நாளில் பிதாமகனின் கருசனை எல்லோரிடத்திலும் பாய்ச்சப்பட்டு அனைவரும் பாவத்திலிருந்து விடுபட பிரார்த் திப்போமாக.