வடக்கு மாகாணத்திலுள்ள சில பாடசாலைகளில் வேண்டத்தகாத செயல்கள் பரவி வருவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அச்சம் வெளியிட்டுள்ளார்.
விழுமியங்கள் இணைந்த தலைமைத்துவம் எனும் தலைப்பில் அதிபர்களுக்கான பயிற்சிப்பட்டறை ஒன்று கைதடி ஸ்ரீ விநாயகர் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
வடமாகாணத்திலுள்ள பாடசாலைகளில் தற்போது வேண்டத்தகாத பல செயல்கள் வேகமாகப் பரவி வரு வது அச்சத்தையும் மனவேதனையையும் தருகின்றது. போதை வஸ்துப்பாவனை, சிறுவர் துஷ்பிரயோகம், நவீன தொழில்நுட்ப இலத்திரனியல் கருவிகள் மூலமாக வேண்டத்தகாத முகப்பக்கங்களில் நுழைந்து உணர்வு களைத் தூண்டக் கூடிய காட்சிகளைப் பார்வையிடல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதால் மாணவ சமுதாயம் படிப்பில் அக்கறையின்றி புலனுணர்வு சார்ந்த இப்படியான விடயங்களில் பொழுதைக் கழித்து கல்வியை இழந்து, உடல் உளத் தூய்மைகளையும் இழக்க வேண்டிய ஒரு காலமாக இந்தக் கால கட்டம் மாறியுள்ளது. நாங்கள் வாழ்ந்து கெட்ட சமுதாயமாகக் கணிக்கப்படக் கூடாது. வாழ்ந்து, வீழ்ந்து, மேலும் மேலெழுந்து வாழப் போகும் வலிமை மிக்க சமுதாயமாகப் போற்றப்பட வேண்டும். அதில் அதிபர்கள், ஆசிரியர்களின் பணி மகத்தானது. அதை மறந்து விடாதீர்கள்.
பத்திரிகைகள் மற்றும் ஒலிபரப்புச் சாதனங்கள் மூலம் தினமும் கிடைக்கப்பெறுகின்ற செய்திகளைப் பார்க்கின்ற போது மனதுக்கு மிக வும்வேதனையாக உள்ளது. சில ஆசிரியர்கள் கூட மாணவ மாணவியரைக் கீழ்த்தர மான நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு அவர்கள் பணி இடைநிறுத்தத்தில் கிடப்பதாக அறிகின்றேன்.
இவற்றில் எவ்வளவு தூரம் உண்மை பொய் உள்ளதென்பதை நான் அறியேன். எனினும் உண்மைகள் ஏதுமிருப்பின் அவர்கள் ஆசிரியர்களாகக் கடமையாற்றுவதற்கு தகுதியற்றவர்கள் என்பது எனது கருத்து. காரணம் ஒரு சட்டத்தரணி, ஒரு வைத்தியர், ஒரு ஆசிரியர் என்போர் மக்களுடன் அந்தரங்கமாகப் பழக வேண்டியிருப்பதால் நம்பிக்கைப் பொறுப்பாளர்களாகக் கடமையாற்ற வேண்டிய கடப்பாடு உடையவர்களாக இருக்கின்றார்கள். அவர்கள் மீது கனமான நம்பிக்கை யைச் சமுதாயம் வைத்திரு க்கின்றது. அந்த நம்பிக்கைக் குப் பங்கம் ஏற்படும் விதத்தில் நடந்து கொண்டால் அவர்கள் அத் தொழிலில் நீடிக்கத் தகுதி அற்றவர்கள் ஆகின்றார்கள்.
இதைக் கருதித் தான் சில தொழில்களைக் கண் ணியம் மிக்க தொழில்கள் என்று அடையாளம் காட்டி உள்ளார்கள். அவ ற்றை ழேடிடந Pசழகநளளழைளெ என் பார்கள். ஆசிரியத் தொழில் ஒரு கண்ணியம் மிக்க தொழில். மக்களால் ஆராதிக்கப்படும் தொழில்.
நல்ல விடயங்கள் நடை பெறுகின்ற போது தட்டிக் கொடுத்துப் பாராட்டவும் அதே நேரம் பிழைகளைக் கண்டிப் புடன் திருத்தவும் தவறுகின்றவர் சிறந்த அதிபராக இருக்க முடியாது. முன்பு கூறுவார்கள் எந்தவொரு அதிபர் தனது உற்ற நண்பனின் மகனுக்கு அல்லது மகளுக்குத் தனது பாடசாலையில் உரிய தகை மையில்லாமல் அனுமதி இல்லையென மறுக்கின்றாரோ அவர் சிறந்த அதிபராவார் என்று.
அதிபர்களில் பலர் இன்று ஏனோ தானோ என்ற நிலையில் பாடசாலைகளுக்குச் சென்று வருவது கண்கூடு. மாணவர்களைத் தண்டித் தால் மனித உரிமை மீறல் வழக்குகள் வரக் கூடும், ஆசிரியரைத் தண்டித்தால் தனக்குக் கட்டாய இடமாற்றம் ஏற்படக் கூடும் என்று இப்படியான கரைச்சல்களில் இருந்து விடுபடுவதற்கு எதையும் கண்டுகொள்ளாமல் இருக்கக்கூடிய ஒரு பழக்கத்தைக் கையாளத் தலைப்படுகின்றனர்.
இல்லையேல் அரசியல் செல்வாக்குப் பெற்ற ஒருவரின் வேட்டியை அல் லது சேலையைக் கெட்டியா கப் பற்றிக் கொண்டு தான் தோன்றித் தனமாக நடந்து கொள்ளத் தலைப்படுகின்றார் கள் என அவர் மேலும் தெரி வித்துள்ளார்.