நடப்பு வருடத்தில் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் 37 பேருக்குமான பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதி தலா 6 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் தேவைகளின் நிமித்தம் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கான செயற் றிட்ட அறிக்கையை அவர்கள் சமர்ப்பிக்க வேண்டும். இந்த வருடத்தின் 8 ஆவது மாதமும் நிறைவடையவுள்ளது. ஆனால் இதுவரையில் அபிவிருத்திச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான செயற்றிட்ட அறிக்கையை 26 உறுப்பினர்கள் சமர்ப்பித்திருக்கவில்லை. உறுப்பினர்கள் மந்தமாகவே செயற்படுகின்றனர். இதுவரையில் 11 மாகாண சபை உறுப்பினர்கள் மாத்திரமே அதனை சமர்ப்பித்துள்ளனர். இவற்றில் 222 செயற்றிட்டங்கள் நடைபெறவுள்ளன. இவை நிதி ஆணைக்குழுவின் வழிகாட்டல்களுக்கு அமைவாக நடைபெற வேண்டும் என்று அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. வருட இறுதியில் செயற்றிட்ட அறிக்கைகள் எமக்கு கிடைப்பதால் அதனை நடை முறைப்படுத்துவதில் சிக்கல்கள் உள்ளன. நடப்பு வருடத்தில் கொள்வனவு மற்றும் செயற்றிட்டம் பற்றிய விவரங்களை முழுமையாகச் சமர்ப்பிக்க முடியாத நிலை உள்ளது. அது சார்பான கணக்கு அறிக்கைகளை முழுமைப் படுத்த முடியாத நிலையும் உள்ளது. ஆகவே உறுப்பினர்கள் தத்தமக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து செயற்றிட்ட அறிக்கையைச் சமர்ப்பித்து வேலைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். வருடஇறுதிக்காலத்தில் மழைகாலம் உள்ளிட்ட காரணங்களைக் கூறி வேலைகள் முடங்காதிருக்க வேண்டும். அந்த அறிக்கைகளை உறுப்பினர்கள் விரைவில் சமர்ப்பிக்க வேண்டும் என்று செயலகம் மேலும் கோரியுள்ளது. |
வட மாகாணசபை உறுப்பினர்களின் அக்கறையீனம்! - திட்ட அறிக்கைகளை சமர்ப்பிக்கவில்லை
Add Comments