உண்மையான சிங்கள அரசியல் கைதிகள் யார்? பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன!

தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்பு கொண்டதாக கூறப்பட்டு சிங்கள அரசியல் கைதிகளின் விபரங்களை அரசியல் கைதிகளின் தரப்பு வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டவர்களில் ஐந்து சிங்களவர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. எனினும் அவர்கள் விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர்கள் இல்லையென்று அரசியல் கைதிகள் தரப்பு தெரிவித்துள்ளது. அவர்கள், ஆயுதம் வைத்திருந்தமை மற்றும் பாதாள உலகத்தினர் உட்பட்ட வேறு குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களாவார்.
நீண்டகாலங்களுக்கு தடுத்து வைக்கப்பட்டு; விசாரணை செய்யப்படுவற்காகவே இவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர் என்பதை தமிழ் அரசியல் கைதிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது. 
இருப்பினும் ஊடகங்கள் சிலவற்றில் அவர்களும் அரசியல் கைதிகளாக காட்டப்பட்டிருந்தனர்.
அரசாங்கமும் பிணையில் அனுமதிக்கப்பட்ட 31பேரில் குறித்த ஐந்து பேரையும் அரசியல் கைதிகள் என்றே கூறியது.
இந்தநிலையில் உண்மையான அரசியல் கைதிகளாக உள்ள சிங்கள கைதிகளின் பெயர்களை தமிழ் அரசியல் கைதிகள் தரப்பு வெளியிட்டுள்ளது.
மெகசீன் சிறைச்சாலை
1)ஜூட்சுரேஸ்
2)அஜித்
3)பந்துல
4)கஜதீர
5) சஞ்சீத் பெரேரா

கொழும்பு விளக்கமறியல் சிறை
6) திரோன் பெர்ணான்டோ
7) லச்மன் குரேஸஷ

கொழும்பு மகளிர் பிரிவு
8) திருமதி கஜதீர

கண்டி போகம்பறை 9) விக்கிரமசிங்ஹ

யாழ்ப்பாண சிறை
10) இந்திக சஞ்சய

அநுதரபுரம்
11) கொப்பேகடுவ
வவுனியா
12 சூரியாராச்சிஹே ஷெல்டன்
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila