அரசியல் கைதிகளின் முழுமையான விடுதலைக்குரிய தீர்வை இன்று 7-ம் திகதிக்கு முன்னர் வழங்குவதாக உறுதியளித்த ஜனாதிபதி அதனை நிறைவேற்றத்தவறியுள்ள நிலையில் நாளை 8-ம் திகதி தொடக்கம் மீண்டும் சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரசியல் கைதிகள் சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான த.தே.கூட்டமைப்பு மற்றும் அரசாங்கத்தின் அறிவிப்புக்களை நிராகரித்துள்ள அரசியல் கைதிகள் தாம் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டுள்ளதாக கவலை வெளியிட்டுள்ளனர்.
நிபந்தனையின்றிய பொதுமன்னிப்பின் அடிப்படையிலான விடுதலையை கோரி கட ந்த மாதம் 12-ம் திகதியிலிருந்து 14 சிறைகளில் உள்ள 253 தமிழ் அரசியல் கைதிகளும் உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
இந்த உண்ணாவிரதப் போராட்டம் விடுதலைக்கான உறுதிமொழிகளுடன் ஜனாதிபதி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் கைவிடச் செய்யப்பட்டது.
எனினும் வழங்கப்பட்ட உறுதிமொழியின் படி அரசியல் கைதிகளுக்குரிய பொதுமன்னிப்போ அல்லது அவர்களால் ஏற்கக்கூடிய விடுதலை தொடர்பான தீர்வோ இதுவரை வழங்கப்படவில்லை.
இந்நிலையிலேயே தமக்கான விடுத லையை கோரி சாகும் வரையான உண்ணா விரத போராட்டத்தை நாளை 8-ம் திகதியிலிருந்து மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை நாளை மறுதினம் அரசியல் கைதிகள் 32 பேர் விடுதலை செய்யப்படுவார் கள் என்ற த.தே.கூட்டமைப்பின் அறிவிப்பையும் விடுவிக்கப்படுபவர்கள் பிணை அடிப் படையிலேயே முதற்கட்டமாக விடுவிக்கப்பட வுள்ளனர் என்ற நீதியமைச்சரின் கூற்ç றயும் அரசியல் கைதிகள் முற்றா நிராகரித் துள்ளனர்.