கிளிநொச்சி கல்வி வலயத்திற்குட்பட்ட பெண்கள் கல்லூரி ஒன்றின் முன்னாள் அதிபர் கடந்த 2012 ஆம் ஆண்டு 13 இலட்சத்து 85 ஆயிரத்து 837 ரூபாவை தவறாக பயன்படுத்தியது தொடர்பில் கணக்காய்வு மேற்கொள்ளப்பட்டு கண்டறியப்பட்டுள்ள நிலையில் குறித்த அதிபருக்கு எதிராக எவ்வித ஒழுக்காற்று நடவடிக்கையும் மேற்கொள்ளாது. கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள பிரபல பாடசாலைக்கு ஒன்றுக்கு அதிபராக பதவியுயர்வு வழங்கியது போன்று இடமாற்றம் செய்யப்பட்டமை கல்விச் சமூகத்தில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
2012 கிளிநொச்சி கல்வி வலயத்தில் உள்ள பெண்கள் பாடசாலையில் அதிபராக இருந்தவர் அக்காலப்பகுதியில் யுனிசெப் நிறுஞவனத்தின் நிதியுதவியுடன் நிர்மானிக்கப்பட்ட 120 க்கு 25 அடி வகுப்பறை கட்டடம் ஒன்று அமைப்பதற்கு தேவையான அளவுக்கு மேல் கட்டடப்பொருட்களின் மிகையான அளவு கொள்வனவுக்கு செலுத்தப்பட்ட 210240 ரூபா தொடர்பில், 2012-12-10 திகதிய NN/KN/ZDE/STCC/2012/03 இலக்கமுடைய கணக்காய்வு அறிக்கையின் அடிப்படையில் 2015-11-04 ஆம் திகதி வடக்கு மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் மாகாண பொது கணக்கு குழுவினால் விவாதிக்கப்பட்ட நிலையில் குறித்த தொகை தொடர்பில் அதிபரிடம் விளக்கம் கேட்கப்பட்டிருந்தது ஆனால் அதற்கு அதிபர் அளித்த விளக்கம் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது என்பதனால் குறித்த தொகையினை 2015-12-04 இற்கு முன் செலுத்துமாறு கிளிநொச்சி வலயக் கல்வித்திணைக்களம் KN/NP/45/20/1/3/5 இலக்கமுடைய 2015-01-05 திகதிய கடிதம் மூலம் அறிவித்திருக்கிறது.
இதனை தவிர 2013 மே 22 ஆம் திகதிய 23 இலக்க சுற்றறிக்கைக்கு முரணாக குறித்த பெண்கள் கல்லூரியில் மாணவிகளிடம் இருந்து நிர்வாக கட்டணமாக 10,75850 அனுமதியற்று அறவிடப்படட நிதி தொடர்பிலும் NN/KN/ZDE/STCC/2012/01 இலக்கமுடைய 2012-10-31 திகதிய கணக்காய்வு அறிக்கையின் படி குறித்த நிதி பயன்படுத்தப்பட்டது தொடர்பில் எவ்வித முறையான பதிவுகளும் இன்மையால் 2015-11-11 கிளிநொச்சி வலயக் கல்வித்திணைக்களத்தில் விசாரணைகள் இடம்பெற்றது.
இதனை தவிர குறித்த பெண்கள் கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறை கட்டடம் ஒன்றின் மேற்பார்வைக்காக 99747 ரூபா வலயக் கல்வி அலுவலுகத்திற்கு இணைக்கப்டபட்டிருந்த தொழிநுட்ப உத்தியோகத்தருக்கு செலுத்தப்பட்டிருந்தது. இது தொடர்பில் எவ்வித மேற்கொள்ளப்பட்ட மேற்பார்வையை நிரூபிப்பதற்காக கணக்காய்வுக்கு சான்றுகள் எதுவும் சமர்பிக்கப்படவி;ல்லை. எனவே இது தொடர்பிலும் குறித்த அதிபருக்கு எதிராக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு; குறித்த தொகையினையும் செலுத்துமாறு வலயக் கல்வித்திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தொழிநுட்ப உத்தியோகத்தர்களுக்கான மேற்பார்வை தொகையானது சட்டரீதியாக ஒரு குறிப்பிட்டளவு தொகை திணைக்களத்திற்கே அனுப்பி வைக்கபடவேண்டும் நேரடியாக தொழிநுட்ப உத்தியோகத்தர்களிடம் வழங்கமுடியாது என்பது குறிப்பிடத்தககது.
இதேவேளை தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் தாங்கள் மேற்குறிப்பிட்ட தொகையை பெற்றுக்கொள்ளவில்லை என தெரிவித்திருகின்றனர்.
மேற்குறிப்பிட்ட தொகைகளில் 210240 ரூபாவும், 99747 ரூபாவினையும் குறித்த அதிபரை செலுத்துமாறும் தவறும் பட்சத்தில் சட்ட ரீதியான நடவடிக்கைக்கு செல்லுமாறு கிளிநொச்சி வலயக் கல்வித் திணைக்களத்திற்கு மாகாண கோப் குழு அறிவித்திருக்கிறது.
இந்தக் காலப்பகுதியில் வகுப்பறை கட்டடங்களை குறித்த பெண்கள் கல்லூரியின் முன்னாள் அதிபரின் கணவர் மற்றும் மைதுனர் ஆகியோரே ஒப்பந்தம் எடுத்து கட்டியுள்ளனர். அத்தோடு குறித்த பாடசாலையில் என்ரிப் திட்;டத்தின் கீழ் அமைக்கப்பட்ட மண்டபம் தொடர்பில் அதே காலகப்பகுதியில் பெற்றோர்கள் அதிருப்தி வெளியிடப் பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மேற்படி விடயங்கள் தொடர்பில் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் அவர்களும் மாகாண பொது கணக்கு குழுவுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி அதன் பிரதியை வடக்கு மாகாண பிரதம செயலாளருக்கும் அனுப்பி வைத்துள்ளார்.
எனவே மேற்படி பல கட்டங்களில் நிதிகளை முறையாக பயன்படுத்தி கையாடல் செய்த குறித்த பெண்கள் கல்லூரியின் முன்னாள் அதிபருக்கு எதிராக எவ்வித ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்காது இருக்கின்றமை கல்வி சமூகத்தின் மத்தியில் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.