அப்போது தம்பதியினர் ஒருவர் திடீரென துப்பாக்கிசூடு நடத்தியதில் 14 பேர் பலியாயினர், 21 பேர் படுகாயமடைந்தனர்.
இதன் பின்னர் தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச்சென்ற சயீத் ரிஸ்வான் பாரூக் (வயது 28) அவருடைய மனைவி தஸ்பீன் மாலிக்(27) இருவரையும் போலீசார் பின்னர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.
பாரூக் சட்டைப் பையில் வைத்திருந்த அடையாள அட்டையை வைத்து அமெரிக்க புலனாய்வுத் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது, அவர் அமெரிக்க குடியுரிமை பெற்ற பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
மேலும் அவருடைய மனைவி தஸ்பீன் மாலிக்கும் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்றும், சமீபத்தில் தான் திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது.
பாகிஸ்தானில் உள்ள சிறுசிறு தீவிரவாத குழுக்களுடன் இருவரும் தொடர்பு கொண்டிருந்தனர் என்றும் அமெரிக்க புலனாய்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கிடையே தஸ்பீன் மாலிக்கின் பின்னணி குறித்து வெளியான அறிக்கையை குலைக்கும் முயற்சியில் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதாவது, மாலிக்குடன் வேலைபார்த்த பல்கலைக்கழக பேராசிரியர்கள் 3 பேர் கூறும் போது தங்களை எந்த ஊடகங்களுடனும் பேசகூடாது என பாதுகாப்பு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாகவும், அவரது பின்னணி குறித்து விசாரிப்பதை நிறுத்த வேண்டும் என நிருபர்களிடம் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.