புதுடில்லி பிரித்தானிய உயர்ஸ்தானிகரத்தின் வதிவற்ற இராணுவ பிரதிநிதி, இலங்கை தொடர்பில் செயற்படுவார்!

புதுடில்லியில் அமைந்துள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரத்தின் வதிவற்ற இராணுவ பிரதிநிதி, இலங்கை தொடர்பில் செயற்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரத்தை கோடிட்டு ஆங்கில செய்தித்தாள் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான யோசனையின் அடிப்படையில் பிரித்தானியா இராணுவம்ääஇலங்கை இராணுவத்துடன் பொறுப்புக்கூறல் விடயங்களில் செயற்படவுள்ளது.
இதனை மையமாகக்கொண்டே அண்மையில் இராணுவ மீளமைப்புக்காக பிரித்தானியா 6.6 மில்லியன் பவுண்ட்ஸ்களை நிதியுதவியை வழங்கவுள்ளதாக பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரோன் அறிவித்தலை விடுத்திருந்தார்.
இது குறித்து கருத்துரைத்துள்ள கொழும்பின் பிரித்தானிய உயர்ஸ்தானிகரக பேச்சாளர், நல்லிணக்கம், மனித உரிமைகள் காப்பு விடயத்தில் இலங்கை இராணுவம் பாரிய சேவைகளை ஆற்ற முடியும்.
இந்தவகையில் பாதுகாப்பு ஆலோசகர் ஒருவர் நியமிக்கப்பட்டு அவர் பிரித்தானியா மற்றும் இலங்கை இராணுவத்தினருடன் இணைந்து செயற்படகூடியதாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
இதேவேளை, பிரித்தானியா இந்த விடயங்களில் மாத்திரமல்லாமல், மொழியுரிமைகள், கண்ணிவெடியகற்றல், செய்தியாளர்களுக்கான புலனாய்வு ஊடகப்பயிற்சிகள் என்பவற்றையும் வழங்கவுள்ளதாக பேச்சாளர் குறிப்பிட்டார்.
இதேவேளை 2009ஆம் ஆண்டு இலங்கையில் போர் முடிவடைந்ததன் பின்னர் பிரித்தானியா, தமது உயர்ஸ்தானிகரத்தில் இருந்து பாதுகாப்பு ஆலோசகரை விலக்கிக்கொண்டது
எனினும் மீண்டும் அந்த நியமனம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அண்மையில் தெரிவித்திருந்தார்.
இருப்பினும் கோத்தபாய கருத்துக்கு கருத்தை வெளியிட்டுள்ள பிரித்தானிய பேச்சாளர், உலகெங்கிலும் உள்ள பிரித்தானியாவின் பாதுகாப்பு ஆலோசகர் நிலை மீளமைப்பின் கீழ் இந்த பாதுகாப்பு ஆலோசகர் திரும்ப பெறப்பட்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila