மேலும் அரசியல் ரீதியாக அணுக வேண்டிய விடயத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிர்வாக ரீதியாக அணுகுகிறார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். வடக்கு மாகாண சபையின் வரவு – செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றியபோதே அவர் மேற்படி குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,
கடந்த வருட நிலைமைக்கும் தற்போதைய நிலைமைக்கும் இடையில் வேறுபாடு எதுவும் இல்லை. அரசின் திட்டங்களால் தென்பகுதிகள் நன்மையடைகின்றனவே தவிர எமது பகுதிகளில் எந்த மாற்றங்களும் இல்லை. தற்போதைய அரசாங்கம் நல்லெண்ண சமிக்ஞைகளை வெளியிடுவது போன்று காட்டிக்கொண்டு மாகாணத்தைக் கட்டுப்படுத்தி முடக்க முயல்கிறது.
முக்கியமாக கிராம இராச்சியத் திட்டத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்திருக்கிறார். இது தொடர்பில் அவர் என்னுடன் பேசவில்லை. அவரின் செயலாளர் ஊடாக பிரதம செயலருக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.
அரசியல் மட்டத்தின் ஊடாக நிர்வாக மட்டத்தின் ஊடாக எடுக்கப்பட்டிருக்கும் இந்த நடவடிக்கை எமக்கு விசனத்தை ஏற்படுத்துகின்றது. குறித்த திட்டம் தொடர்பில் என்னிடம் கருத்து அறியுமாறு பிரதம செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கிராமிய அபிவிருத்தி முழுமையாக மாகாணத்துக்கு உட்பட்ட விடயமாகும். மாகாண அதிகாரத்தைப் பிரித்தெடுக்கும் முயற்சியே கிராம இராச்சியத் திட்டமாகும் என்றார்.